Sunday, October 7, 2018

குண்டாசி




ஜெ

குண்டாசியின் கதாபாத்திரத்தில் வந்த மாற்றம் ஆச்சரியம் அளித்தது. எதிலும் ஆர்வமில்லாதவனாக இருந்தவன் எப்படி சாவுச்செயல்களில் அப்படித் தீவிரமாக ஈடுபடுகிறான் என்று ஆச்சரியப்பட்டேன். உண்மையிலேயே இது ஆரம்பம் முதலே இருந்துவந்தது.அவனிடம் ஒரு நெகெட்டிவிட்டி இருந்தது. அந்தப்பண்பால்தான் அவனால எதிலும் ஒட்டமுடியவில்லை. ஆகவேதான் குடித்து அழிந்தான். ஆனால் இந்தச் சாவுச்செயல்களை ஒட்டாமல் செய்ய அவனுக்குள் இருக்கும் அந்த நெகெட்டிவிட்டிதான் பெரும்பாலும் உதவியாக இருக்கிறது. ஆகவேதான் அதைச் சிறப்பாகச் செய்கிறான். சிறப்பாகச் செய்யும்போது தன்னம்பிக்கை வருகிறது. வாழ்க்கைக்கே அர்த்தமும் வருகிறது

ராஜ்