Saturday, October 27, 2018

போர்க்களக்காட்சி




ஜெ

தனித்தனியாக வந்துகொண்டிருந்த கதைகளெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து மயங்கிக்குழம்புவதுபோலிருக்கிறது இந்தப்போர்க்களக்காட்சியில். இதில் பல விஷயங்கள் சுட்டிச்செல்லப்படுகின்றன. அவற்றையெல்லாம் ஒட்டுமொத்தமாக விரித்து எடுக்கவேண்டியிருக்கிறது. உதாரணமாக கணிகர் இதுவரை இந்தப்போரை முன்னெடுத்துக்கொண்டு வந்தார். அவருக்கு என்ன ஆயிற்று? அவர் ஏன் நோயுற்று சாகும்தருவாயில் இருப்பவர் போலிருக்கிறார்? சகுனியின் மனநிலைகள் ஏன் மாறிக்கொண்டே இருக்கின்றன? இங்கே என்னென்ன நிகழ்கிறது என்பதே ஒரு பெரிய கேன்வாஸில் விரிந்து கிடக்கிறது. இவற்றை ஒன்றுடன் ஒன்று இணைத்துக்கொள்ளவே முடியவில்லை. மொத்தமாக இன்னொருதடவை வாசிக்கவேண்டும் என நினைக்கிறேன்

பாஸ்கர்