Thursday, October 11, 2018

கலையும் கொலையாடலும்




பீமனும் துரியோதனனும் செய்யும்போரின் நிலைகளின் நுட்பங்கள் வெறும்பெயர்களாக இல்லை. ஒருவர் இன்னொருவருடன் எப்படியெல்லாம் போரிடமுடியும் என்ற நுட்பங்களாகவும் இருந்தன. அவை ஒரு கலைபோல இருந்தன. ஆனால் அவற்றுக்குள் இருந்தது கொடூரமான கோபம். கடைசியில் அதுதான் நிற்கிறது. பீமன் எல்லா நிலைகளையும் கடந்து மிருகமாகவே ஆகி களத்தில் குருதியாடுகிறான். அத்தியாயமே ஒரு சிறுகதை வடிவம் கொண்டிருந்தது. ஒரு கலையழகுகொண்ட போரில் தொடங்கி மூர்க்கமான கொலைவெறியில் வந்து முடிகிறது அந்த ஆட்டம்

ஜெயக்குமார்