அன்புள்ள ஜெ
வெண்முரசு விழா ஏன்?
படித்தேன்.
உங்கள் ஆக்கம் பெரிதினும் பெரிது. இடையூறுகளை களைய க்ருஷ்ணன் இருப்பான்.
அவனாலேயே உங்களுக்கு இந்த ஆக்கம் புரிய ஆர்வமும் சக்தியும் கொடுக்கப்
பட்டது. அவன் க்ருபையாலேயே உங்களால் சிறப்பாக முடிக்க முடியும். ஒரு வருடம்
கிட்டத் தட்ட முடியப் போகிறது.
க்ருஷ்ணன் இருக்கிறான் உங்களோடு. இல்லை என்றால் இது சாத்தியமே இல்லை.
வாழ்த்துக்களும் வணக்கங்களும்.
மாலா
அன்புள்ள ஜெயமோகன் சார்,
தங்களுடைய ,வெண்முரசு விழா ஏன்? பதிவை படித்துவிட்டு எழுதுகிறேன், VENMURASU பணம் சம்பாதிக்க எழுதவில்லை , வேறு நல்ல நோக்கத்துடன் எழுதப்படுகிறது என்பது,
' எனக்கு தெரியும்' என்பதை விட, நான் அகத்தில் உணர்கிறேன் என்பதே உண்மை....
உங்களுடைய கிழ்கண்ட வரிகளை படித்துவிட்டு, எனக்கு ஒன்று தோன்றியது, ....
........................... ஆகவே
ஒரு பெரிய முயற்சி வெற்றிபெறவேண்டுமென்றால் ஆரம்பத்திலேயே பலமடங்கு ஊக்கம்
தேவைப்படுகிறது. அந்த செயல்பாடு அழுத்தமும் வேகமும் கொண்டதாக முதலிலேயே
தன்னை முன்வைத்தாக வேண்டியிருக்கிறது. அந்த விசையால்தான் அது முன்னகரும்.
தங்களுடைய ,வெண்முரசு விழா ஏன்? பதிவை படித்துவிட்டு எழுதுகிறேன், VENMURASU பணம் சம்பாதிக்க எழுதவில்லை , வேறு நல்ல நோக்கத்துடன் எழுதப்படுகிறது என்பது,
' எனக்கு தெரியும்' என்பதை விட, நான் அகத்தில் உணர்கிறேன் என்பதே உண்மை....
உங்களுடைய கிழ்கண்ட வரிகளை படித்துவிட்டு, எனக்கு ஒன்று தோன்றியது, ....
...........................
காந்தி
பார்த்த ஒரே சினிமா ராமராஜ்யம் பற்றிய கதையில், ஒரு வரி வரும், அதில்
வரலாறு நடக்கும் தருணத்தில், அந்த இடத்தில, ஒரு"" ஈ""யவாக வாவது இருக்க
வேண்டும் என்று,
அப்படியே
நானும் உணர்கிறேன், உங்களுக்கு, எந்த வகையில் நான் உறுதுணையாக இருக்க
வேண்டும் என்று சொல்லுங்கள், நான் தயார், உங்கள் வாசகன் என்பதை,
தாண்டியும், VENMURAசால் நிறைய அறிய பலனடைந்திருக்கிறேன், என்பதால் இதை
சொல்கிறேன், நிச்சியமாக உணர்ச்சி வசப்பட்டு இதை எழுதவில்லை,
இந்த வரலாற்று தருணத்தில், நானும் ஒரு ஓரத்திலாவது இருக்க விரும்புகிறேன்,
நன்றி
SOUNDAR.G
பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,
வணக்கம்.
மேற்கண்ட தலைப்பில் வந்த தங்கள் பதிவை படித்தேன்.இவ்வளவு தூரம் தீர்க்கமாக ஆராய்ந்து,முன்,பின் விளைவுகளை கணக்கில் கொண்டு ''வெண் முரசு''
என்னும் மாபெரும் 'வேள்வியை' தொடங்கி மிகச் சிறப்பாக நடத்தி
வருகிறீர்கள்.அதற்கான முதல் நூல் வெளியீட்டு விழாவையும் நடத்த
போகிறீர்கள்.பல பெரியவர்களின் ஆசிகளும்,இறைவனின் அருளும் பரிபூரணமாக
உங்களுடன் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
"போற்றுவார் போற்றலும்,தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே" என்ற கண்ணதாசன் கூற்றுப்படி.தங்களின் இந்த திருப்பணி மேன்மையுடன் மேலும் தொடர இந்த எளியோனின் அன்பு வாழ்த்துக்கள்.
அன்புடன்,
அ .சேஷகிரி.