அன்புநண்பர்க்கு, வணக்கம். நூல் அறிமுக விழா சிறப்பாக நடக்க வாழ்த்துகள்.
இன்று பிரயாகை படித்தேன். குந்தியின் வாதம் ஆணித்தரமாகவும் இதுவரை
கேள்விப்படாத செய்திகளுடனும் இருந்தது. தாங்கள் எக்கருத்தை முன்வைத்தாலும்
அதற்கான சான்றுகளை எவரும் மறுக்க இயலாவண்ணம் வைப்பீர்கள். அதையே
குந்தியிலும் கண்டேன்.
திருதாஷ்டிரன் கருத்து பற்றி பிதாமகர் என்ன கருதினார் என்பது தெரியவில்லை. ஒருருவேளை பின்னால் எழுதுவீர்கள் என நினைக்கிறேன்.
ஒரே ஒரு சந்தேகம்; துருபதனைப் பிடிக்கும் போரில் கர்ணனும் கலந்து கொண்டதாக் எழுதி உள்ளீர்கள். நான் அறிந்தவரை இது எந்த பாரதத்திலும் இல்லாதது. தங்கள் புனைவு என நினைக்கிறேன். ஆனால் கர்ணன் வந்ததும் சுவையாகத்தான் இருந்தது. வியூக வர்ணனைகள் போர்க்களத்தையே கண்முன் வைத்துவிட்டன. முதுகுவலி பூரணமாகத் தீர்ந்து விட்டதா? உடல்நலத்தில் கவனமாய் இருங்கள் இல்லத்தில் எல்லாருக்கும் விசாரிப்புகள்.
வளவதுரையன்
அன்புள்ள வளவதுரையன்,
மகாபாரதத்தில் கர்ணன் அப்போரில் முதன்மைப்பங்கு கொண்டதாகவே உள்ளது. எதற்கும் இருக்கட்டும்ம் என ஒருமுறை சோதனைசெய்துகொண்டேன். துரியோதனனின் நண்பனாக ஆனபின் அனைத்துப்போர்களிலும் கர்ணனும் இருக்கிறான்
ஜெ