ஜெ சார்,
பாண்டவர்களின் குணாதிசயத்தை தொடர்ச்சியாக துல்லியமாகக் காட்டிக்கொண்டே இருக்கிறீர்கள். ஆனால் அவர்கள் மாறாமலும் இல்லை. தொடர்ந்து மாறிக்கொண்டும் இருக்கிறார்கள். அவர்களை மிக நெருக்கமாகத் தெரியும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.
தருமன் அறக்கவலைகள் கொண்டவனாகவும் தடுமாற்றங்கள் உடையவனாகவும் இருக்கிறான். அர்ஜுனன் நிதானமான கூர்மையான ஆளாக இருக்கிறான். பீமன் கசப்பு கொண்டவனாக இருக்கிறான். குந்தி எப்போதுமே அதிகாரத்துக்கான ஆசை கொண்டவளாக இருக்கிறாள்
காட்டுக்குள் வந்ததும் அவர்கள் மாறுகிறார்கள். அவர்கள் ஒருவரோடொருவர் நெருங்குகிறார்கள். அர்ஜுனன் கொஞம் இறுக்கம் தளர்ந்து இலகுவாக ஆகிறான். பீமனின் கசப்பு மறைகிறது. குந்தி மீண்டும் சாதாரண அம்மாவாக ஆகிறாள்
இந்த வனவாசம்தான் அவர்களை இணைபிரியாத சகோதரர்களாக ஆக்கியது என்பது தெளிவாகவே தெரிகிறது. அந்தவகையில் இது அவர்களுக்கு நல்லதுதான் செய்கிறது. அவர்களை வலிமையானவர்களாக ஆக்குகிறது.
ஸ்ரீராம்