ஹாய் ஜே,
விஷ்ணுபுரம் விருது விழாவிற்கு ஒரு முறையாவது
வர வேண்டும் என்று நினைத்டிருந்தேன். ஆனால் இந்த முறை இல்லை. சர்ஜரி
முடிந்து வீட்டுக்கு வந்து விட்டேன். இன்னும் ஐந்து வாரங்கள் கொஞ்சமாக
ஓய்வு. என் பெண் ஒரு கோபக்கார அம்மாவாக, வேலை செய்ய முரண்டு பிடிக்கும்
சிறு பிள்ளையாக என்னை பார்த்துக் கொள்கிறாள். என் எதிரே முதற் கனல்,
மழைப்பாடல் எடுத்துப் படிக்க கூப்பிட்டுக்கொண்டிருக்கிறது. நான் உங்கள்
மற்ற வாசகிகள் போல் உங்கள் இணைய தளத்திற்குக் கடிதம் எழுதவில்லை. அந்த
அளவிற்கு இன்னும் என் எழுத்து வளரவில்லையோ?
அசோக
மித்திரனுக்கு என்று மழைப்பாடல் முதல் பக்கத்தில்!!! நான் என்னுடைய
சிறுகதைத் தொகுப்பில் அசோகமித்திரன் மாமாவிற்கு என்று எழுதலாம் என்று
நினைத்துக் கொண்டிருந்தேன். எனக்கு முன்னால் தியாகராஜன் மாமாவுக்கு நீங்கள்
டெடிகேட் செய்து விட்டீர்கள்.
என்
வீட்டின் பக்கத்தில் இருக்கும் கடற்கரையில் நடந்து கொண்டிருந்தேன்.
நீங்கள் வந்த போது கூட நாம் அங்கே சென்றோம். அங்கே பக்கத்தில் ஒரு ராமர்
கோவில். அப்போது ராமாயணத்தை நினைத்துக் கொண்டிருந்தேன். ராமாயணம்,
மகாபாரதம் இரண்டும் இந்தியாவின் மாபெரும் காப்பியங்கள். ஆனால் இரண்டு
கதைகளும் நிகழ்ந்த இரண்டு யுகங்களில் எத்தனை மாற்றங்கள்!!! அந்த யுகங்களைக்
கடந்து இன்னும் அதன் கதைகளைக் கேட்டு அதை மீண்டும் எழுதி மீண்டும் படித்து
தெய்வங்களாக வழிபட்டு வாழும் மரபினர் நாம்.
இரண்டிலும்
பெண்கள் சொல்ல முடியாத சோகங்களைச் சுமந்து கொண்டு ஆண்களை வென்று
வாழ்கிறார்கள். ஆண்கள் இல்லாமல் வாழ்கிறார்கள். ஆண்களின் அழிவுக்குக்
காரணமாகிறார்கள். மகாபாரதத்தின் பல நுண்ணிய அடுக்குகளைக் கொண்ட காவியமாக
ராமாயணம் இல்லாவிட்டாலும் ராமாயணம் ஒரு அழகியல் காப்பியம். அடுத்தது அதை
எழுதுகிறீர்களா?
சரி ராமாயணத்தை எப்போது எழுதப் போகிறீர்கள்? அதில் ஒரு நூலிலாவது என் தோழி சித்ராவிற்கு என்று ஒரு சொல் இருக்குமா?
அன்புடன்
சித்ரா
அன்புள்ள சித்ரா
இதற்குமேல் வளர்ந்தால் மூட்டுப்பிரச்சினை வந்துவிடாது?