இனிய ஜெயம்,
இன்றைய அத்யாத்தில் இடும்பர் குடிகள் வசிக்கும் இல்லங்கள் குறித்த வர்ணனை அபாரம்.
அதைக் காட்டிலும் அபாரம் ஓவியர் சண்முகவேல் அதை வண்ணம் கொண்டு தீட்டி இருந்த சித்திரம். நமது கற்பனையில் சொற்கள் என்ன உலகை சமைக்கிறதோ அதற்க்கு ஒரு மாற்று கூட குறையாத ஓவியம்.
வண்ண மனிதர்களிடம் பேசவே கூடாது. ஏன் பேச்சு என்பதே வண்ண மனிதர்களின் சூழ்ச்சி ஆயுதம் எனக் கருதும் இடும்பன், அவனது பேச்சின் வாயிலாகவே பீமனின் 'தன்மான சீண்டல்' பேச்சில் சிக்கி பீமனின் அறைகூவலுக்கு இயைவது இன்றைய அத்யாத்தின் மன நிழல் ஆட்டங்களின் ஒரு தருணம்.
மழைத் துளிகள் சொட்டுவதுபோல முதிய இடும்பர்கள் குத்தித்து இறங்குவது குறித்த வர்ணனை அழகு.
கடலூர் சீனு