இன்று "பச்சைப்பாம்பு ஒன்று ஐயத்துடன் தீபட்ட பட்டு நூல் போல பின்னால் வளைந்து விலகியது" என்ற வரியைப் படித்தபோது அந்தக் காட்சியை ஏறக்குறைய காண முடிந்தது. அடுத்த நொடியிலேயே உங்களிடமும் அதை சொல்ல வேண்டும் என்று தோன்றியது.
பீமனை
ரெண்டாமூழம் மறுவாசிப்பை விட சிறப்பாக சித்தரிக்க முடியும் என்று
நினைத்ததில்லை, அவனுடைய கசப்பை மிகப் பிரமாதமாகக் கொண்டு வருகிறீர்கள்.
அன்புடன்
ஆர்வி