Wednesday, December 10, 2014

சகோதரர்களின் காடு




அன்புள்ள ஜெ

பாண்டவர்களுக்கு நடுவே காட்டில் உருவாகி வரும் ஆழமான பாசப்பிணைப்பு அற்புதமாக உள்ளது. முன்னர் அவர்களுக்கு நடுவே ஒருவகையான கசப்பும் சந்தேகமும் இருந்துகொண்டே இருந்தது. ரதத்த உறவும் பொதுவான ஆசைகளும்தான் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. இப்போது அதர்குமேல் சென்று அவர்கள் ஒருவரை ஒருவர் ஆழமாகப்புரிந்துகொள்கிறார்கள்.

இந்தப்பகுதியில் என்ன வித்தியாசம் என்றால் ஒருவரோடு ஒருவர் ஆதிக்கம் செய்ய முயலவில்லை. ஒருவரை ஒருவர் வழிநடத்தவோ கட்டுப்படுத்தவோ முயலவில்லை. ஒவ்வொருவரும் இவர் இப்படித்தான் என்று புரிந்துகொள்கிறார்கள். ஏனென்றால் இது காடு. இங்கே அவரவர் திறமையை அவரவர் காட்டினால்தான் வாழமுடியும்

இங்கே உண்டுபண்ணப்படும் இந்த ஒற்றுமைதான் அவர்களிடம் கடைசி வரை இருந்தது. அந்த ஒற்றுமையை உண்டுபண்ணக்கூடிய ஒரு சக்தியாக குந்தியும் மாறிவிடுகிறாள்

காட்டில் பீமன் ஒரு குரங்காக மாறி சுதந்திரம் அடைகிறான். தர்மன் தன்னுடைய தத்தளிப்பு உண்மையில் எதைப்பற்றி என்று புரிந்துகொள்கிறான். அருமையான சித்தரிப்புகள்

காடு அவர்களை மீண்டும் பிறக்கவைத்திருக்கிறது

ரகுராமன் அனந்தகிருஷ்ணன்