Wednesday, February 4, 2015

அஃகுதல்

[நந்துனி]


பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,
வணக்கம்.
இன்றைய அத்தியாயத்தின் ஒவ்வொரு வரியும் அணு அணுவாக ரசிக்க  கூடிய  உட்சம்!.எப்படித்தான் எழுதுகிரீர்களோ தெரியவில்லை!.இறுதியில் தருமன் கூறுவது போல்

 “அவற்றுக்குரிய பொருள் அளிக்க அரசர்கள் எவராலும் இயலாதென்றாலும் இதை ஏற்றருள்க” 
என்னை போன்ற எளியவர்கள் உங்களுக்கு எதை கொடுப்பது?
இந்த அத்தியாயத்தை படித்தவுடன் வழக்கம் போல் "வெண் முரசு விவாத தளத்தை' படித்தேன் அதில் மதிப்பிற்குரிய திரு.பி.ஏ.கே அவர்களும்,நீங்கள்,உங்கள் படைப்புத்திறனின் உச்சத்தில் இருந்து எழுதி வருவதாக சரியாக கணித்து எழுதி இருந்ததை படித்து "இரட்டிப்பு மகிழ்ச்சி"(அதற்கு தங்களின் பதிலும் மனதை தொட்டது).
மேலும் இதில் வரும் "விறலி நந்துனியின் கம்பிகளை புரியிளக்கி அஃகினாள்" என்பதற்கு என்ன பொருள்?
நன்றி.
அன்புடன்,
அ .சேஷகிரி


அன்புள்ள சேஷகிரி

புரி என்பது யாழ் வீணை போன்றவற்றின் கம்பிகளை முறுக்கும் குமிழ். அஃகுதல் என்பது நுணுக்கமாக முறுக்கி நீளம் குறைத்தல். டியூன் செய்தல்.

ஜெ