ஜெயமோகன் பல இடங்களில் உவமைகளை கொன்டு வெண்முரசில் பந்தாடுகிறார், இருப்பினும் எனக்கு தெளிவான பொருள் படாதவைகள், அல்லது கொஞ்சமெனும் இன்னும் உதவி இருந்தால் புரிந்து கொள்ள கூடிய உவமைகளை பற்றி பேச தொன்றுகிறது
ஏற்கனவே யாரும் கேட்டு பதில் அளிக்க பட்டதாக தெரியவில்லை, இருந்தால் சுட்டி அளித்து உதவவும்
ஏற்கனவே யாரும் கேட்டு பதில் அளிக்க பட்டதாக தெரியவில்லை, இருந்தால் சுட்டி அளித்து உதவவும்
1. சித்ரகர்னி - சிங்கம்... இது கிட்ட தட்ட பீஷ்மரே தான். தருமம் கோரும் பசுவை குருகுல குடிலில் இருந்தே இழுத்து செல்கிறது - பீஷ்மர் காசி ராஜகுமாரிகளை சித்ராங்கதன் பொருட்டு வெல்ல செல்வதர்க்கு முன் சிங்கத்திற்கு முன் சிபியிடம் புகலிடம் கொள்ளும் பறவையும் பருந்தும் சொல்ல படுகிறது
2. இது கொஞ்சம் நீநீநீளமான உவமை தொடர்.. அவை இப்படி ஆரம்பித்து செல்கின்றன.
மகத அரசன் இரண்டு தாயில்லாது தவிக்கும் பருந்து குஞ்சுகளை மலை உச்சியில் இருந்து எடுத்து வருகிறான். அவை வளர்க்கபட்டு பின் அஸ்தினபுரிக்கும் மகததிர்க்கும் உளவு தூதுக்கு பயன் படுகின்றன.அவையே பின் காந்தாரத்திற்க்கும் சென்று வருகின்றன. அப்படி சென்று வருகையில் - ஒரு கிழ சிங்கம்ம் ஒரு மாட்டை கொன்று ஆனால் முழுதாக தின்று முடிக்க முடியாது இருக்கிறது. அன்று தூது கொன்டு செல்லும் பருந்தின் கண்ணில் பட - அது கொஞ்சம் அந்த மாட்டில் இருந்து, சிங்கத்தை தாண்டி, பிய்த்து செல்கிறது. பின் அதுவே மகதம் அடைந்து, மீண்டும் மகதத்தின் இளவரசின் தூதுடன் காந்தாரம் செல்கிறது
கடும் பசியில் தன்னீரே இல்லாத மனல் கடலில் ஒரு ஓநாய் - காந்தாரத்தில் தான்
சொளபாலரின் அம்பு பட்டு இறக்கும் பருந்து. பருந்தை கவ்வி செல்லும் பசித்த ஓநாய்
ஓநாயை தேடி செல்லும் சொளபாலர். அவர் கையில் கிடைகாமலே ஓநாய் விழுங்கி விடும் கழுகும் அதன் காலில் இருக்கும் செய்தியும்.
இடையில் காந்தாரியை மணம் புரிவார்களா என்று கேட்கபடும் மகதம், கன்றுகுட்டி,
சாட்டை காந்தாரம் அடைதல், குப்பையோடு நெருப்பில் இடப்படும் ஏறிந்து போகாத சாட்டை
சொளபாலர் தீயில் எரியாத சாட்டையை கொள்ளுதல்
இந்த உவமைகள் கதையின் ஊடாக ஊடாகவே...
கதையிலோ,
திருதராஷ்டிரனுக்கு கண்ண்ணில்லாவிட்டாலும் தகுந்த மனைவியின் அவசியம் மகுடம் தரிக்க. ஹஸ்தினபுரியின் நிதி நிலமை, காந்தாரம் போன்ற கருவூலம்கொன்ட நாட்டின் உறவின் தேவை. காந்தாரத்தின் பெரும் கனவு கொன்ட இளவரசன். காந்தாரம் ஷத்திரிய உறவு தேடி மகதத்தின் எண்ணம் அறிய செல்லுதல்
பீஷ்மர், அருமைமகன் திருதராஷ்டிரனுக்கு, பெண் கொடை கேட்க காந்தாரம் செல்லுதல்
மகதம் சாட்டையை அனுப்புதல், காந்தர மன்னன் சாட்டையை எரிக்க ஆனையிடுதல்
மகதத்தின் இளவரசு தருனத்தையும் எதிர்காலத்தையும் எண்ணி தான் தூது அனுப்புதல்
பீஷ்மரிடம் அவர் கிளம்பும் தருவாயில் காந்தாரி திருதராஷ்டிரனை மனக்க சம்மதிக்கும் செய்தி கிடைத்து ஹஸ்தினபுரி புரப்படுதல்.
சரியாக சொல்லி இருக்கிறேனா, அங்கு இங்கு ஏதேனும் விட்டு விட்டேனா என்று தேரியவில்லை
இந்த உவமை வலையை யாரும் சீராக அர்த்த படுத்தி உதவுவிர்களா? முதல் சிங்கம் தான் கிழட்டு சிங்கமா? அந்த ஓநாய் தான் சொளபாலர் சகுனியின் காலை கடித்ததா?நிஜமாகவே ஒரு ரெண்டு புத்தகதின் முன்னமே இந்த உவமைகள் இருந்து தொடர்கின்றனவா? இல்லை என் பிரமையா?
ராகவ்