Thursday, February 5, 2015

பிருகு வம்சம்



ஜெ சார்

நேற்றைய கதை [புலோமி]  வாசித்ததுமே நினைவில் வந்தது பரசுராமனின் கதை. பிருகுலத்தைச்சேர்ந்தவர் தானே பரசுராமனும்? அதை பிருகுவே சொல்கிறார். உன்னுடைய குலம் 18 முறை பாரதத்தை வெல்லும். என்றைக்கும் இருந்துகொண்டிருக்கும் என்று. அந்தக்கதை முழுக்க முன்னாடியே வண்ணக்கடலிலே வந்துவிட்டது. அந்த கதை ஒரு குட்டிக்காவியம்போல இருக்கும். அற்புதமான கதை அது. அவற்றை மட்டுமே எடிட் செய்து ஒரு நல்ல சின்ன நாவலாக ஆக்கியிருக்கமுடியும் என்று நினைத்துக்கொண்டேன்.

இந்தக்கதை அதனுடன் சென்று இணைந்து விட்டது. இங்கே வரும் இந்தப் புலோமியின் கதை தானே பரசுராமனில் வரும் ரேனுகாதேவின் கதை? அவளும் இதே போல கந்தர்வனைக் கண்டு அடைந்த சபலம்தானே அந்தக்கதை. ஆனால் அதற்குல் ஆண்களின் வலிமை கூடிவிட்டது. இங்கே அன்னையாக இருப்பவள்  அங்கே மகனாலேயே கழுத்துவெட்டு செத்துப்போகிறாள்

இந்த பிரம்மாண்டமான கதைவலையை ஞாபகம் வைத்துக்கொண்டு எப்படித்தான் பின்னிக்கொண்டு போகிறீர்கள் என்றே தெரியவில்லை.

பாஸ்கர்