ஜெ,
வெண்முகில்நகரம் 3 யில் விறலி சொல்லும் வரிகள் ஒவ்வொன்றையும் வாசித்துக்கொண்டே இருந்தேன். பாண்டவர்கள் ஐவரின் மனதுக்குள் புகுந்து அவர்களின் காமத்தை எல்லாம் பிரித்து வைத்துவிட்டு சூதன் சென்றுவிடுகிறான். அதன்பிறகு விறலி அமர்ந்துகொண்டு அவளுடைய மனதில் அதற்கு அப்பால் உள்ள ஆழங்களைப்பற்றிப் பேசத்தொடங்குகிறாள்
ஒவ்வொருவரியையும் பலமுறை வாசித்தேன். சிலவரிகள் சாட்டையால் அடிப்பதுபோலத் தெரிந்தன. ஆறுபருவங்களில் ஒன்றை அவளுக்கே விட்டுவிடுங்கள் என்பதைப்போல கவித்துவமான ஒன்றை சமீபத்திலே வாசித்ததில்லை
ஒவ்வொருவரையும் அவள் பெண்ணுக்கே உரிய காமத்தின் பார்வையிலே அடையாளப்படுத்தி ஒவ்வொரு பருவத்துடன் சேர்த்துச் சொல்கிறாள். கடைசியில் அவளை எஞ்சும் பருவமகாச் சொல்கிறாள். ஒரு பெரிய கவிதையை வாசிப்பதுபோலவே இருந்தது
அதிலும் ஐவரும் ஐவருமாக நினைத்துக்கொள்ளுங்கள் என்பதும் ஐவரையும் ஒருவராக அவள் அறிவாள் என்பதும். என்ன சொல்ல. காமம் என்பதில் இனி ரகசியமே இல்லையோ என்று நினைத்தேன்
சண்முகம்