I am reading your mahabharatham regularly. I will be honest here. I am addicted to your style. I stay back till 12 every day to read that day’s episode, in spite of the requirement to get up at 6 again. I have some felicity in reading the original puranic texts. I see a value in the way those characters are built by Valmiki and Vyasa. Without any blemishes.
I feel hurt when you bring noble characters to human level, especially calling Dharmaputra as eunuch and Arjuna as womanizer. Bheeshma almost a drunkard. But you also build them back into the great character that they are as per Vyasa. One of such episode is today where the message from Dharmaputra to Dhirdharashtra. I feel Arjuna in Mahabharatha stands for ‘ganyamaana nadathai’ the way he behaved with Urvasi. Hope you will restore his character.
Thanks and regards
Ganapathy Subramanian
அன்புள்ள கணபதி சுப்ரமணியம்,
மகாபாரதக் கதைச்சுருக்கங்கள், கதைசொல்லல் நிகழ்ச்சிகள் வழியாக மகாபாரதக் கதாபாத்திரங்களைப்பற்றி நாம் ஒரு எளிய சித்திரத்தை வைத்திருக்கிறோம். அது இயல்பானது
ஆனால் மூலமகாபாரதம் அப்படி எளிமையான ஒற்றைப்படைச் சித்திரத்தை அளிப்பதில்லை. அர்ஜுனனைப்பற்றி நீங்கள் சொல்லும் சித்திரம் மகாபாரதத்தில் இல்லை.மாறான சித்தரிப்பும் உள்ளது
மனிதர்கள் வாழ்க்கையின் கடும் அழுத்தத்தில் எப்படி வளையநேர்கிறது என்பதைத்தான் மகாபாரதம் காட்டுகிறது
மகாபாரதக் கதாபாத்திரங்களை திருவுருக்களாக, நாம் இன்று வாழும் சமகால ஒழுக்க நெறி சார்ந்து சித்தரித்துக்கொள்ளக்கூடாது. அது அப்படைப்பைப் புரிந்துகொள்ள பெரும்தடை
ஜெ