ஜெ
இன்றைய அத்தியாயத்தில் [ வெண்முகில் நகரம் 6] தர்மன் விஸ்வரூபம் கொண்டு எழும் காட்சி முக்கியமானது. அவன் மாறிக்கொண்டே இருக்கிறான். ஆரம்பத்தில் ஆசையும் தடுமாற்றமும் நேர்மையும் கொண்ட பலவீனமான மனிதன். பிறகு நேர்மையானவன்.
அவனுடைய வலுவான முகம் வெளிப்பட்டது பூசையில் திருதராஷ்டிரனை வைக்கவேண்டும் என்று சொன்ன இடத்தில் அங்கே சொன்னதைத்தான் இப்போதும் சொல்கிறான் ஆனால் இப்போது குரலே ரொம்பவும் மாறிவிட்டிருக்கிறது. பேச்சு வேறுமாதிரி இருக்கிறது
எப்போதும் மூத்தவர் சாபத்தை அடையக்கூடாது என நினைப்பவனாகவே தெரிகிறான். ஆனால் அவன் இப்போது பேசும்போது அதற்காகச் சொல்லும் காரணங்கள் கூர்மையாகவும் அதிர்ச்சியளிப்பவையாகவும் இருக்கின்றன
அவனை இப்படி ஆக்கிய மாற்றம் அவன் பாஞ்சாலியை அடைந்ததுதான். அவள் அவனுக்குல் இர்ந்த அர்ஜுனனை வெளியே எடுத்துவிட்டாள் என்பது அற்புதமான படிமம். அவள் அவனுக்கு சரஸ்வதியாகவே மாறிவிட்டிருக்கிறாள்
சாமிநாதன்