Saturday, February 7, 2015

கங்கையும் கன்னியும்



ஜெ,

வெண்முரசின் பிரயாகை தொடங்கும்போது கங்காதேவியுட்ன் பலவகையிலும் பாஞ்சாலிதேவி ஒப்பிடப்படுவாள் என்று நினைத்தேன். ஆனால் அவளை தீயோடு உவமைப்படுத்தி வேறுவகையிலே கொண்டு சென்றுவிட்டீர்கள். ஒருவகையிலே குறையாகவும் இன்னொருவகையிலே நிறைவாகவும் இருந்தது.

கங்காதேவிஅனைத்தையும் அணைத்துக்கொண்டு செல்பவள். அவளுக்கு குறைவே இல்லை. கங்கைக்குப் பங்கமில்லை என்று சொல்வார்கள். பாஞ்சாலியும் அதுபோல ஒரு தூய்மையான பெண். அவளுக்கு பல குறைகள் உண்டு. சீற்றம் கோபம் எல்லாம் உண்டு. ஆனால் அதெல்லாமே கங்கைக்கும் உள்ளதுதானே?

பாஞ்சாலியின் குணச்சித்திரத்தை நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கட்ட்மைத்துக்கொண்டே செல்லும் விதம் மனநிறைவளிக்கிறது. பாஞ்சாலிக்கு இருக்கக்கூடிய இந்த தீவிரம் ஏனோ வில்லிபாரதத்திலே வரவில்லை. பாஞ்சாலிசபதத்திலேதான் வந்திருக்கிறது

பாஞ்சாலியைப்போல ஒரு தேவதை இங்கே லட்சக்க்ணக்கானவர்களுக்கு தெய்வமாக ஏன் ஆனாள் என்பது முக்கியமான கேள்வி .சீதை பொறுமையானவள். அவள் கடவுள் ஆகவில்லை. ஆனால் பாஞ்சாலி சீற்றம் கொண்டவள் அவளைத்தான் காளிரூபமாக கங்காரூபமாக நம்முடைய முன்னோர் பார்த்திருக்கிறார்கள்

ராஜ்