Sir,
If there was Chola pandya dynasties at that time of Mahabharata why didn't they learn to construct palaces and brick buildings from the artisans of Aryavarta.there is no excavated building structure in Tamilnadu and to that extent in any south Indian states dating back to more than 3000 years.to my understanding the Tamils and south indians were hunter gatherers until people from north came here and taught them agriculture and construction.may be some sort of small feudal states would have started around 4 - 5th century BC but not anything like a kingdom or something.before that only local chieftains and tribal lords had existed.what is your opinion on this you are well read and well traveled.if you give your explanation in your site i will be happy.
Gopinath
அன்புள்ள கோபிநாத்
ஆராய்ச்சியாளர்கள் அல்லாத நாம் இதைப்போல முடிவுகளை நோக்கிப் பாயலாகாது. நமக்கிருக்கும் பல முன்முடிவுகளைக்கொண்டு சிந்திக்க ஆரம்பித்துவிடுவோம். அதன்பின் ஆராய்ச்சிக்கே இடமில்லை.
தமிழகத்தில் மகாபாரதத்திற்கு சமகாலம் அல்லது முந்தையகாலம் என்று சொல்லத்தக்க காலத்தைச் சேர்ந்த அகழ்விடங்கள் காணப்படுகின்றன. ஆதிச்சநல்லூர், கொடுமணல் போல. அங்கே உறையடுப்பில் உருக்கிச்செய்யப்பட்ட இரும்புக்கருவிகள் உள்ளன.
ஆனால் சங்ககாலத்தைப்பற்றிய தொல்பொருட் சான்றுகள், அடித்தளங்கள் அனேகமாக ஏதும் இல்லை.
அதேபோல வடக்கிலும் வடக்கிலும் மகாபாரதகாலகட்டத்தைச் சேர்ந்த அகழ்வுச்சான்றுகள் பொருட்படுத்தும்படி ஏதும் கிடைக்கவில்லை, மகாபாரதம் கற்பனை அல்ல உண்மை என புறவயமாக வாதிடும்படி ஒரு தொல்பொருள் சான்றும் இன்றுவரை கிடைக்கவில்லை.
ஆகவே மகாபாரதம் என்பது பொய், அக்காலத்தில் இந்தியாவில் மக்கள் வேட்டையாடி வாழ்ந்தனர் . மகாபாரதப்போர் என்பதே வேட்டைக்குலங்கள் நடுவே உள்ளபோர்தான், அதை பின்னாளில் பெரிய அரசர்களுக்கு இடையே நடந்த போர்களாக ஆக்கிக்கொண்டார்கள் என்று வாதிடுபவர்களும் உள்ளனர்
ஆனால் மகாபாரதகாலகட்டத்திற்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த லோத்தல்-ஹரப்பா நாகரீகத்தின் ஏராளமான தொல்லியல்சான்றுகள் கிடைக்கின்றன
இந்த மர்மத்தை புரிந்துகொள்ள மேலும் விரிவான ஆராய்ச்சிகள் தேவை
ஜெ