Saturday, July 18, 2015

லௌகீகமும் நீதியும்

ஆசிரியருக்கு,

மன்னித்தல்-எதிர்- நீதியை நிலை நாட்டுதல் இதற்கு இடையே உள்ள முரண் காலம்தோறும் இலக்கியவாதிகளை அலைகழித்துக் கொண்டிருக்கிறது. தாஸ்த்யவெஸ்கி மன்னிதலின் பால் மிகுதியாக சாய்ந்திருப்பார், டால்ஸ்டாயும் கிட்டத்தட்ட அவ்வாறே, நீங்கள் இவ்விருவருக்கும் இடையே.

இன்று அக்ரூரரும் கிருதவர்மரும் மன்னிக்கப் படுவது லௌகீக வாதிகளால் ஆளப்படும் லௌகீக உலகில் நிகழ்வது. காமக் குரோத மோகங்களை தம்மை மீறிய கையால் ஆட்டுவிக்கப் படும் சக்தியாகப் பார்ப்பதும் , அதற்கு பலியாவதை மானுடத்தின் தன்னியல்பான பலவீனமாகப் பார்ப்பதும் கருனைகூர்வதும் லௌகீக ஞானத்தின் விளைவே,  அடிப்படை விழைவுகளை வெல்ல எத்தனிக்கும் மானுடப் பண்பாட்டு முயற்சிக்கு  ஒரு சறுக்கல், எஞ்சவிடப்பட்ட ஒரு பாம்பு. லௌகீக ஞானத்திற்கும் இலக்கியத்திற்கும்  இது ஒரு உன்னத நிகழ்வு,  ஆன்மீக ஞானத்திற்கு இது ஒரு  பின்னடைவு. 

கிருஷ்ணன்