நல்ல பதிவு
அருணாச்சலம். நன்றி. [வெண்முரசில் கனவுகள்]
கனவும், மயக்கமும் நடக்கும் தருணங்கள் பெரும்பாலும் தர்க்கத்தை மீறி நடக்கும் செயல்கலுக்காக, ஒரு படிம தன்மையுடன் சொல்லப்படுகிறது. மனிதர்களுக்குள் நடக்கும் மாற்றங்களுக்காக, அவர்களின் குணமாற்றங்களுக்காக சொல்லப்படுகிறது. எனக்கு தோன்றிய அப்படிப்பட்ட தருணங்கள் இவை.
கனவும், மயக்கமும் நடக்கும் தருணங்கள் பெரும்பாலும் தர்க்கத்தை மீறி நடக்கும் செயல்கலுக்காக, ஒரு படிம தன்மையுடன் சொல்லப்படுகிறது. மனிதர்களுக்குள் நடக்கும் மாற்றங்களுக்காக, அவர்களின் குணமாற்றங்களுக்காக சொல்லப்படுகிறது. எனக்கு தோன்றிய அப்படிப்பட்ட தருணங்கள் இவை.
- அம்பிகை வியாசருடன் கூடும் இரவில் அவள் கனவில் தோன்றும் யானை. அம்பாலிகையும் கனவு காண்பாளா தெரியவில்லை.
- விஷம் குடித்த பீமனுக்கு தோன்றும் கனவு.
- சகுனி, சகோதரர்களுடன் ஒரு குழியில் விழுந்து சகோதர்களின் உயிர் தியாகத்தால் பிழைத்து வருவது. இறந்தவர்களின் எழும்புகளில் இருந்து பகடை செய்வது. - இதை பற்றி ஜெ சொன்னார். இது சமண மகாபாரத்தில் வரும் கதை. இது மகாபாரத கதைக்குள் அடங்காது, ஏனெனில் சகுனியின் சகோதரர்கள் யாரும் சாவதில்லை. இருந்தாலும் இந்த கதை நன்றாக இருப்பதால் இதை கனவு காட்சியாக வைத்ததாக சொன்னார்.
- சகுனியை கடிக்கும் ஓநாய். நாம் இருவரும் இதை பற்ற எழுதியிருக்கிறோம்.
- https://groups.google.com/d/msg/venmurasu-readers-discussions/WWGuTS2-3sk/0x4BW90SDEAJ
- http://venmurasudiscussions.blogspot.com/2014/11/blog-post_23.html
- துரியோதனன் ஸ்தூணகர்ணனை சந்தித்து தன்னுள் இருக்கும் பெண்மையை அடித்து கொள்ளுமிடம். இப்படி ஒரு காட்சி சிகண்டிக்கும் இருக்கிறது என்று நினைக்கிறேன். https://groups.google.com/d/msg/venmurasu-readers-discussions/b-vKqJja2ec/f2UsZ_w0DPoJ
- வஜ்ரமுகி குருவி வரும் இடங்கள்.
- குந்தி சூரியனுடன் கூடுமிடம்.
- அம்பை முன் தோன்றும் மூன்று பெண் தேவதைகள்.
இப்போதைக்கு இவ்வளவு தான் நினைவுக்கு வருகிறது. வெண்முரசை பற்றி நெடுநாட்களுக்கு பிறகு எழுதுகிறேன்.
ஹரீஷ்