மணி மருள் மலர்; நான்கு.
இந்தக் கிருஷ்ணன் பயல் இருக்கிறானே, காதலோ மோதலோ அதை கையாளும் விதம் மிக மிக அழகு. கீதையை உரைக்கப்போகும் குருவின் ஆளுமை கொஞ்சம் கொஞ்சமாக உருவாகி வருகிறது.
காதலில் ப்ரியசகி தனது என்று, தனது புனிதம் என்று, தனது பலம் என்று எதை எதை எல்லாம் காக்கிராளோ அனைத்தையும் அவளுக்கான தாள இயலாத பாரமாக நீலன் மாற்றுகிறான். நீலன் வசம் பாரத்தை இறக்கி வைத்தாலே விடுதலை எனும் நிலைக்கு, செயலின்மை வழியே அவளை தள்ளுகிறான். அவள் உடையும் கணம் எதுவோ அதை கச்சிதமான ஒரு செய்கையால், அல்லது சொல்லால் நிகழ்த்திவிட்டு மீண்டும் தன் இயல்புக்கு சென்றுவிடுகிறான். இனி சரணாகதி மட்டுமே அவளுக்கான ஒரே மீட்சி.
மோதலில் இன்னும் அழகு. யாதவக் குடிகள் அரசியல்மன்றில் கிருஷ்ணனை அவதானித்தால், ஒவ்வொரு ஆளுமையும் தங்களை அலைகழிக்கும் ஆசையை,பயத்தை அதன் விசையைக் கொண்டு செயல்படுகிறார்கள். ஒவ்வொரு ஆற்றலும், ஒன்று பிரிதால் மோதி, மற்றொன்றால் முயங்கி ஒரு சமன்வயம் கண்டு [ஈக்வலிபிரியம்] உறையும் கணத்தில்,[அது வரை அனைத்தையும் அவதானித்தபடி அமைதி காக்கிறான்] அத்தனை விசைகளையும் தகர்க்கும் சொல் எதுவோ அதையே நீலன் முதல் சொல்லாக தேர்கிறான். எந்த உணர்வானாலும் அதை கொண்டவன் அதில் நீண்ட நேரம் நிலைக்க இயலாது இது ஒரு எளிய உளவியல். ஆக உணர்வின் சரிவில் நிற்கும் யாவரையும் அந்த முதல் சொல் தொட்டு, தொடர்ந்து தாக்கிப் பிணைத்து தனது குறிக்கோள் எதுவோ அதை நோக்கி நகர்த்துகிறான். ஹச்தினாபுரியிளிருந்து மதுராவை மீட்க படை கொள்ளும் தருணத்தில் இது இன்னும் துலக்கமாக வெளிப்படுகிறது.
இப்போது இந்த சியமந்தக மணிக்கு அதே விளையாட்டின் வேறொரு வடிவை கையாளுகிறான். சியமந்தக மணியை எதிரிகள் அணுகாமல் காப்பது என்பது வியக்தம் கூடிய வழி. அந்த மணியை அதற்க்கான அடிதடி ஆளுமைகள்வசம் தூக்கிப் போடுவது வல்லவன் விளையாடும் வழி. ஆம் சியமந்தக மணிக்காக ஆளுமைகள் முட்டி மோதி இறுதியில் எது என்சுகிறதோ அது அந்த மணியைக் கொள்வதில் அனைத்து ஆற்றலையும் இழந்து நிற்கும். அந்த இறுதி ஆற்றலை சும்மா தட்டி எறிவது நீலனுக்கு எளிது.
அயோக்கியப் பயல்.
கடலூர் சீனு