Friday, December 4, 2015

ராமன்



ஜெ

வெண்முரசில் அடிக்கடி ராமன் அனுமன் பற்றிய பேச்சுக்கள் வந்துசெல்கின்றன. ராமனின் காலகட்டம் மிகப்பழையது எனத்தெரிகிறது. சக்த்ருக்னன் மதுராவைப்பிடித்து நெடுநாட்களுக்குப்பின்னர்தான் மதுரா என்னும் புதியநகரம் உருவாகியிருக்கிறது. கார்த்தவீரியன் ஆண்ட மாஹிஷ்மதி அதற்கு முன்னால் உள்ள பெருநகரம். ராமன் ஆண்ட அயோத்தி பழம்பெருமைபேசும் குட்டிநகரமாக சிறுத்துக்கிடக்கிறது. அவனுக்கு அன்னையாகிய கோசலை பிறந்த கோசலமும் பழம்பெருமை பேசும் நகரம். அதில் கிருஷ்ணன் நுழையும்போது அவனை ராமனமாகவே அந்த மக்கள் நினைத்தது சிலிர்ப்பூட்டும் நிகழ்ச்சியாக இருந்தது.

ராமனின் அளவுக்கே ராவணனின் மாண்பும் வீரமும் மகாபாராதக் காலகட்டத்திலே பேசப்படுகின்றன. ராவணன் நிகரற்ற வீரன் என்று சொல்லப்படுகிறான். இன்றைக்குப்போலவே உண்மையான ஒரு வரலாறும் கூடவே சூதர்கள் உருவாக்கிய அற்புதகதைகளும் கலந்த உருவமாக அந்த ராவணன் இருக்கிறான். தன் மகன் கடோத்கஜனுக்கு பீமன் அனுமனின் கதையைச் சொல்லுமிடம் அழகானது

சிவராஜ்