Thursday, December 3, 2015

எளியவர்கள்


ஜெ

மகாபாரதத்தில் அரசகுலப்பெண்கள் மட்டுமே உண்மையில் சொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால் தாசிகள் நிறையபேர் இருந்திருக்கவேண்டும். அவர்கள் எல்லாம் எப்படிப்பட்டவர்கள்? அவர்களின் மனநிலைகல் என்ன?

வெண்முரசு அவர்கலின்  உலகத்திற்குள் போவதனாலேயே அது பலவகையிலும் எனக்கு பிடித்திருக்கிறது. உண்மையில் நானெல்லாம் எந்த அரசியுடனும் என்னை இணைத்துப்பார்ப்பதில்லை. சிவை, சுபகை, சுஃப்ரை, மாலினி, சியாமை போன்ற பணிப்பெண்களைத்தான் நான் என்னுடன் அடையாளம் கண்டுகொண்டு வாசிக்கிறேன். ஆகவேதான் மகாபாரதம் எனக்கு இந்த வடிவில் மிகவும் நெருக்கமானதாக இருக்கிறது

அதிலும் சுபகைதான் உச்சம் என நினைக்கிறேன். இதிலுள்ள அர்ப்பணம் மனசுக்கு மிக நெருக்கமானதாக உள்ளது. அர்ப்பணிக்கும்போதுதான் பெண் மிக அந்தரஙமாக நிறைவை அடைகிறாள் என நினைக்கிறேன்

ஜெ என் பெயரை வெளியிடவேண்டாம்

கெ