Wednesday, December 2, 2015

வண்ணங்களின் பெருக்கு



காண்டீபம் நிறைவோடு ஒரு துயரமே அப்பிக்கொண்டது. வண்ணக்கடல் என்னும் தலைப்பு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இதுவரையிலான வெண்முரசுகளை வண்ணக்கடல் என்றே சொல்லுவேன். இதற்குபிறகு சூதாட்டம், வனவாசம் குருசேத்திரம் முடிய கண்முன் எழுந்து வந்த ஒவ்வொருவரும் மரணமடைய போகிறார்கள் அல்லது  அவமானபடப்போகிறர்கள்  என்ற எண்ணம் மிகவும் சோர்வை அளித்தது.


மகாபாரதம் தெரிந்த கதை என்ற ஒரு கர்வம் 2013 வரை எனக்கிருந்த்து. ஆனால் மிக அடிப்படையான யயாதிக்கு பிறகு பிரியும் குலங்களை இதில்தான் அறிந்து கொண்டேன். சமணர்கள் குறித்து அறவே தெரியாது. ரிச்சி ஸ்டிரீட் ( செளகார்பேட்டை) மழலை தமிழ் ஜைனர்கள் தவிர, வேறு நல்ல தமிழ் பேசும்  ஜைனர்களும் தமிழ் நாட்டில் உள்ளர்கள் என்பதே சில வருடங்களுக்கு முன்புதான் தெரியவந்த்து. என் சரித்திர அறிவு அந்தளவுதான்.
இதுவரை படித்தும் பேசியும் அறிந்தவற்றை எண்ணிக்கொண்டேன். வெண்முரசு வெறும் கதையல்ல. அது ஒரு தரிசனம் என உணர்ந்தேன். மானுட மனங்களை கலைகளை அரசியலை ஐவகை நிலங்களை அறிகிறேன். இப்போது  உவகையோடு அடுத்தடுத்த நாவல்களுக்காக காத்திருக்கிறேன்.

காளிப்பிரசாத்