வேதசாரம்
அன்புள்ள ஜெ,
மகாபாரதத்தின் மையமுடிச்சை
நோக்கி வருவதற்கக ஒரு முஸ்தீபாகத்தான் நீங்கள் இந்திரநீலம், காண்டீபம், வெய்யோன் ஆகிய
நாவல்களை எழுதினீர்கள் என நினைத்துக்கொண்டிருந்தேன். மகாபாரதம் பால் என்றால் வெண்ணை
கீதைதான். கீதை எப்படி எந்தச்சூழலில் உருவானது என்பதையே வெண்முரசாக எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்.
பன்னிரு படைக்களம் அதை தெளிவாகவே காட்டிவிட்டது. இனிமேல் கீதையின் பின்புலமே நாவல்களாக
விரியும் என நினைக்கிறேன்
வேதசாரம் என்று கீதையைச் சொல்லலாம்.
அது வேதமறுப்பு அல்ல. வேதத்தின் கனி. கனிகொள்வது மரத்தை மறுப்பதல்ல. ஆனால் மரத்தை உண்ணவும்
முடியாது. அதையே நீங்கள் எழுதிய வரிகளின் வழியாக கண்ணனும் சொல்கிறான்.
சுவாமி