Saturday, July 9, 2016

பன்னிரு படைக்களம்





அன்புள்ள ஜெ அண்ணாவிற்கு,


     வணக்கம்,நலமா? நீண்ட இடைவெளிக்குபின் நேற்றுதான் பனிரெண்டு படைகளம் படித்துமுடித்தேன்,இதன் முக்கிய content ஜராசந்தன் வதம்,சிசுபால வதம்,திரௌபதி துகிலுரியல்,
மறைந்த வேதத்தை மீண்டும் எழுப்ப முயலும் ஜராசந்தன், நடைமுறை வேதத்தின் தேவையற்ற நெறிகளை காக்கமுயலும் சிசுபாலன் ,ஆகிய இருவரையும் கொல்வதன் மூலம் தன் புது வேத நெறியை நிலை நிறுத்துகிறான் இளைய யாதவன்,நாக வேதத்திற்க்கு எதிரானவன் என்பதனால்தானோ அவன் கருட கொடி கொண்டிருக்கிறானோ கண்ணன்.?


அதேபோல கர்ணன் நாகர்களை காக்க முயல்பவன்,துரியன் தலைமையிலான அரசவை பழய நெறிகளை காப்பவர்கள் இவர்களுக்கு எதிராக கிருஷ்ணனின் குரலாய் அஸ்தினாபுரி அவையில் எழுகிறாள் கிருஷ்ணையான பாஞ்சாலி,அவளை மானபங்கம் செய்யும் போதுஅவளை காக்க வருகிறாள் மற்றொரு கிருஷ்ணையான லஷ்மணை,லஷ்மணையை நீங்கள் கிருஷ்ணை என்று அறிமுகம் செய்தபோது அது ஏன் என்று புரியவில்லை,துரியனின் மகள் பெயர் லஷ்மணை தானே என்று எண்ணி இருந்தேன் ,ஆனால் திரௌபதியை
காக்க வந்தபோது லஷ்மணை என்ற பெயரை விட கிருஷ்ணை என்ற பெயரே மிக பொருந்தும் என்று எண்ணவைத்துவிட்டீர்கள்,


 கண்ணன் -சிசுபாலன் ஆழிபடை யுத்தம்,புது வேதம் பழய வேதத்திற்கான யுத்தம் என்று கொள்ளலாம்,இரு ஆழிகளும்(வேதங்கள்) ஒரே அச்சில் வார்த்தவை ,இறுதியில் சிசுபாலனின் ஆழி கண்ணனின் ஆழியுடன் ஒன்றாக ஆகிவிடுகிறது,பழய வேதம் புது வேதத்துடன் இணைந்துவிடுகிறது.
சிசுபாலன் சின்முத்திரையுடன் விழுகிறான் ,தன் ஆணவம்,கன்மம்,மாயை விட்டு,ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைகிறது. அல்லது பழைய வேதம் தேவையற்றதை விட்டுவிட்டு புதிய வேதத்தொடு இணைகிறது.


 திரௌபதி,பீமன்,அர்ஜுனன் புதிய வேதத்திற்கு தயாராகிவிட்டனர்,தருமர் அமைதியாய் இருக்கிறார் ,அடுத்த பகுதி "சொல்வளர்காடு"என்று குறிப்பிட்டுவுள்ளீர்கள்,தருமனின் புதிய வேதத்திற்கான மாற்றம் இதில் நிகழுமோ?,அதன் விளைவாக யக்ஷபிரசனம் கிடைகுமோ?
 "சொல்வளர்காடு"க்கு எனது வாழ்த்துகள் 
இப்படிக்கு
குணசேகரன்