Sunday, August 7, 2016

ஞானமும் புராணமும்






அன்புள்ள ஜெ,

சார்வாக மரபில் பிரஹஸ்பதி முதல்குருநாதராக மதிக்கப்படுகிறார். ஆனால் அவரது நூலகாக் கிடைப்பவை எல்லாமே கர்மத்தை சொல்லக்கூடியவையாக உள்ளன. அவர் தேவகுருவாகவே இருக்கிறார் .சுக்ராச்சாரியார் தான் அசுரகுரு. சார்வாக மரபு எப்படி தேவகுருவிலிருந்து பிறந்தது? அதற்கு ஏதேனும்விளக்கம் வரும் என நினைக்கிறேன்.

ஏற்கனவே உதிரியாக ஆங்காங்கே படித்ததும் உரைகளில் கேட்டதுமாக நிறைய சிந்தனைகள் உள்ளன. அவையெல்லாம் எங்கெங்கோ கிடந்தன. அவற்றையெல்லாம் இப்படி ஒரே கதையாகத் திரட்டிக்கொள்வது மிகுந்த பயனுள்ளதாக உள்ளது.

இதைத்தான் ஞானத்தை புராணம் மூலம் பெறமுடியும் என்று அந்தக்காலத்தில் சொன்னார்கள் என நினைக்கிறேன்

கணபதி