Sunday, August 7, 2016

பெருந்தந்தை






அன்புள்ள ஜெயமோகன் சார்

சமீபத்திய அத்தியாயங்களால் திருதராஷ்டிரன் மேல் பெரும் கோபம் வந்தது. அவரை எப்படிப்புரிந்துகொள்வதென்றே தெரியவில்லை. எல்லா நியாயமும் பேசிவிட்டு சரியான சந்தர்ப்பத்தில் சுயநலத்துடன் முடிவெடுக்கும் குடும்பப்பெரியவர்களைப் பார்த்திருப்போமே, அதைப்போல என நினைத்தேன்.

ஆனால் இன்றைய அத்தியாயத்தில் தந்தை என்றிருப்பது பெரும் வதை, பெருந்தந்தை என்றிருப்பது மிகப்பெரியவதை என்று அவர் சொல்லும்போது பகீர் என்றது. அது எவ்வளவுபெரிய உண்மை. அத்தனை பிள்ளைகளுக்கு தந்தையும் தாத்தாவும் ஆனவர் அதன்பின்னர் ஒருநிமிடமாவது நிம்மதியாக தூங்கமுடியுமா என்ன?

அழுது கூசி அமர்ந்திருக்கும் திருதராஷ்டிரரின் சித்திரம் மிகமிக வலுவான ஒரு பாதிப்பைச் செலுத்தியது

சித்ரா