Wednesday, August 10, 2016

அது நீயேசொல்வளர்காடு துவக்கப்பகுதியில் உத்தாலகர் ஸ்வேதகேதுவிடம் 'அது நீயே' என சொன்னது 'வயலை' முன்வைத்து என்பது இப்போதுதான் உரைத்தது :)


அதிலிருந்த நீர் வெளியேறிய பிறகான நிலம்... ,
நீர் தன்னகங்காரத்தை( இது சரியான வார்த்தையா என தெரிய வில்லை ) குறிக்கிறது ,
முந்திய பகுதியில் உத்தாலகர் அவர் குரு வயலை பார்க்க வரும்போது  நீர் வெளியேறாமல் ( தான் எனும் உணர்வு ) தடுத்தார் , ......


இன்னொன்று உத்தாலகர் கொள்முதல்வாதி , கேது பொருள்முதல்வாதி , இப்போதைய அர்த்தத்தில் சொல்லவில்லை :)) அதாவது சடங்கு பிராமணருக்கும்  , பொருளுணர்ந்து அறிதல் சுவையை நாட விரும்பி வேதம் நோக்கி வருபவனுக்கும் உள்ள வித்யாசம் ....
ஆனால் இதும் உத்தாலகரில் மாறுகிறது , தான் சொல்லிய சொல்லிற்கு வேறு பொருள் தன்னை அமைவதை உணர்கிறார் , கொஞ்சம் குழம்பிட்டேன் ,தப்பாக புரிந்து கொள்கிறேன் என நினைக்கிறேன் :)


அறிதலை தேன்சுவையோடு இணைத்து வரும் வரிகள் எல்லாம் அபாரம் ,


இன்னொன்று உத்தாலகரின் பெண் சார்ந்த பார்வை , அது வேதத்திலிருந்து சொல்வதாக நான் எடுத்து கொண்டேன் , அதாவது பெரும் போராழியில் தன்னை வெகுவாக இழந்த சமூகம் ,தன்னை எப்படியாவது ,எவ்வழிகளிலாவது பெருக்கி கொள்ள விரும்பும் , அதன் குரலாக எனக்கு உத்தாலகர் தோன்றினார் , அடுத்த தலை முறை யின் குரலாக ஸ்வதகேது வின் மனம் . இப்போதைய கேரளாவை அப்படி நினைத்து பார்த்தேன் , முந்திய தலைமுறை வெறிகொண்டு பணம் ஈட்டிவிட்டார்கள் , அடுத்த தலைமுறை பணத்தில் ஆர்வமில்லாமல் அறிதல் நோக்கி நகர்கினறனர் , உஸ்தாத் ஹோட்டல் கதையை கூட இதற்கு உதாரணமாக சொல்லலாம் .


இதில் பெண்களுக்கானஇடம் ஸ்வதகேதுவின் வார்த்தைகளில் அழகாக மாறுகிறது , முன்பு சுகனிடம் வைக்கப்பட்ட கேள்வி இதுதான் என்று நினைக்கிறேன் .


சார் , இதில் எனக்கு பிடித்த சில வரிகளில் சிலதை இணைத்துள்ளேன். இவைகளில் மிக மனம் தோய்ந்தேன் .
//“கனிந்த கனி நிலம்தேடுவதுபோல , ஆம், மட்கி விதைவிரிந்து முளைத்தெழுவதற்காக” //

//தேடுபவன் ஒருபோதும் முழுமையைக் கண்டடைவதில்லை என்னும் மாயத்தால் ஆட்டுவிக்கப்படுகின்றது இவ்வுலகு” . சினந்து “தேடுபவன் அவன் தேடுவதையாவது கண்டடைவான்” // இதில் உங்களை ,உங்கள்  இளவயது கோபத்தை பார்த்து சிரித்து சந்தோஷப்பட்டேன் :))

//ஒவ்வொரு புல்விதையும் புவியை மும்முறை போர்த்தி மூடவேண்டுமென்றே விழைகிறது. நான் என் அறிதல் ஆயிரம் மேனி விளையும் அவை ஒன்றை நாடுகிறேன்” என்றான்// இதும் நீங்கதான் :)

//மண்ணிலிருந்து விண் உறிஞ்சுவதென்ன விண்ணிலிருந்து மண் அடைவதுதான் என்று அறிந்தவனே தேனை அறிந்தவனாகிறான்.”// இதில் உங்களிலுள்ள இளங்கோவடிகள்( கொற்றவை ,அறிதலே அன்னையாக நினைக்கும் பாத்திரம் ) தெரிகிறார் :)

பின்குறிப்பு : சார் நீங்கள் எனக்கு அழைத்த தொலைபேசி என்னை இப்போது அதிகம் பயன்படுத்துவதில்லை ( கொஞ்ச நாள் கழித்து அதை மட்டுமே பயன்படுத்தலாம் என இருக்கேன் :)  ) , வீட்டிலிருக்கும் , அம்மா எடுத்திருந்தார்கள் , திரும்ப உங்களுக்கு அழைக்க நினைத்தேன் , ஆனால் என்னால் சிங்கை கூட்டத்திற்கு வர இயலவில்லை என்பதை உங்களிடம் சொல்ல தயக்கமாக இருந்தது , அதனாலேயே அழைக்க வில்லை , சார் , காசில்லாத போது தேவைகள் இன்றி சந்தோசமாக இருந்தேன் , இப்போது காசு வர ,அதற்க்கு மேல் தேவைகள் அழுத்துகிறது :)


அது பிரச்னை இல்லை ,சமாளித்து வந்து விடுவேன் ,அனால் என்னிடம் பாஸ்போர்ட் இல்லை ,அதற்காக போனால் என்னிடம் இப்போதிருக்கும் இடத்திற்கான proof இல்லை , சரி நான் இதற்க்கு லாயக்கற்றவன் என விட்டு விட்டேன் :)


சார் , இந்தியாவில் எங்கிருந்தாலும் வைத்திருப்பேன் , என்னால் இன்னும் முன்தயாரிப்புகளுக்கான குணத்தை முழுமையாக கொண்டுவர முடியவில்லை , எப்போதும் அந்நேர தோன்றல் வழியாகவே போகிறேன் , இரண்டு வருடங்களில் சரியாகி விடுவேன் :)


இன்னொன்று எனக்கு நகரங்களை விட புராதன இடங்களும் இயற்க்கை சூழலும் மட்டுமே இழுக்கிறது , சிங்கப்பூர் ஒரு நவீன நகரம் :) இது என் இயலாமைக்கான ஒரு பொய் காரணம் தான் ,இருந்தாலும் சொன்னேன் :)


இப்போதே அங்கு கூட்டத்தில் நடக்க விருக்கும் மகிழ்வுதருணங்கள் கன்முன்தோன்றுகின்றன , வராதது பெரும் இழப்புதான் , அதை உணர்கிறேன் ..

ராதாகிருஷ்ணன்