Friday, August 5, 2016

பிரஹஸ்பதி



மகாபாரதத்தில் பிரகஸ்பதிசூத்திரங்களை பாஞ்சாலி கேட்கும் இடம் வருகிறது. அதில் கர்மம் என்னும் கொள்கை மட்டுமே பேசப்படுகிறது. அது பிரகஸ்பதியேதானா பிற்காலச் செருகலா என்ற கேள்வி எப்போதும் உண்டு.

அதேபோல பிரகஸ்பதிசூத்திரம் என்னும் நூலின் சிலபகுதிகள் கிடைத்துள்ளன. ஆனால் அது கிபி ஐந்தாம்நூற்றாண்டு நூல் என்கிறார்கள். அதன் நம்பகத்தன்மையும் கேள்விக்குரியது
சார்வாக நாத்திக சிந்தனையின் முதல்குரு பிரகஸ்பதி என்பது ஏறத்தாழ ஒப்புக்கொள்ளப்பட்டுவிட்ட ஒன்று. அந்தப்பிரகஸ்பதிதான் கர்மக் கொள்கையை எழுதினாரா என்று விவாதிப்பதுண்டு.

ஆனால் நாத்திகசிந்தனையில் உள்ள கர்மம் என்னும் கொள்கை முற்றிலும் வேறானது. அவர்கள் காரியகாரணவாதத்தைத்தான் அப்படிச் சொல்கிறார்கள் என்பதை இன்று புரிந்துகொண்டேன்

சுவாமி

ஜெ,

மதிப்பிற்குரிய சுவாமி அவர்களுக்கு

பிரதீதசமுத்பாதம் என பௌத்தம் பிற்காலத்தில் சொன்னதன் முந்தைய வடிவம்தான் சார்வாகர்களின் கர்மக்கொள்கையாக இருந்திருக்கும். இதை நடராஜ குரு எழுதியிருக்கிறார்

ஜெ