ஜெ
பீஷ்மர் நெறிமீறமுடியாது என்று வஞ்சினம் உரைத்துக்கொண்டு கிளம்பியதுமே தோன்றியது
அவர் அதை மீறுவதில்தான் முடியும் என்று. போர் பயங்கரமான எடைகொண்டது. எவராலும் அதை வளையாமல்
சுமக்கமுடியாது. நான் விடுதலைப்புலிகளை ஆதரித்துவந்தேன். அதன்பின் அவர்கள் செய்த ஒவ்வொரு
கொலையப்பற்றியும் தெரிந்துகொள்ளும்தோறும் என் மனம் விலகியது. மானுடவிடுதலைக்காக கிளம்பியவர்களேன்
இப்படியெல்லாம் செய்கிறார்கள் என்ற எண்ணம் வந்தது
அதன்பிறகுதான் பின் தொடரும் நிழல் படித்தேன். அந்நாவலில் லெனின் எப்படி எல்லா
தர்மத்தையும் மீறினார் என்று வாசித்தபோது திகைப்பாக இருந்தது. ஒருவேளை போர் என்று வந்துவிட்டால்
அபப்டித்தானோ என்ற எண்ணம் வந்தது. இன்றைக்கு மகாபாரதப்போரை வாசிக்கையில் அது உறுதியாகிறது.
போரில் எவரும் அறத்தில் நிலைகொள்ளமுடியாது
சரவணக்குமார்