Friday, November 9, 2018

வெண்முரசு கட்டுரைகளைப்பற்றி


காவியம் சுசித்ரா

வெண்முரசின் கட்டமைப்பு


ஜெ

வெண்முரசின் அமைப்பு ஒட்டுமொத்தமான கதையோட்டம் பற்றிய முழுமையான கட்டுரைகளை எதிர்பார்க்கிறேன். தொடர்ந்து வாசிப்பவர்கள் வாசிப்பின் வழியாகவே அவற்றை பெரும்பாலும் அறிந்திருப்பார்கள் என்றாலும்கூட அவற்றை எல்லாம் பொதுவாகத் தொகுத்துப் பார்த்துக்கொள்ள உதவும் அமைப்பு தேவையாக உள்ளது. உதாரணமாக சகுனிக்கு காந்தார ஓநாய் என்னும் படிமம் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருக்கிறது. அதேபோல திருதராஷ்டிரருக்கு யானை. அம்பிகை கண்ணில்லாத யானையை கனவிலே கண்டுதான் அவளைப் பெற்றாள். இந்த படிமங்கள் வழியாக ஒட்டுமொத்தக்கதையும் எப்படி அடியில் ஒன்றாக இணைக்கப்படுகிறது என்பதையெல்லாம் எழுதினால்தான் வெண்முரசின்மீதான பார்வை முழுமையடையும் என்று தோன்றுகிறது


ஆர்.குமார்