அன்புள்ள ஜெ
கர்ணனும் கௌரவர்களும்
சந்திக்கும் இடங்கள் எல்லாமே அற்புதமாக அமைந்துள்ளன. டால்ஸ்டாயை வாசிக்கும்போது சொல்லப்படும்
ஒரு விஷயம் உண்டு. அவருடைய உச்சகட்ட கற்பனை ஒரு மானுடத்தருணத்தில் எக்ஸ்ட்ரீம் காமன்சென்ஸ்
வெளிப்படுவது என்று. இதை ஷேக்ஸ்பியருக்கும் சொல்வார்கள். அந்தமாதிரியான இடங்கள் அவை..
கௌரவர்களுக்கு
கர்ணன் அண்ணனைப்போல. அரசனோ தோழனோ அல்ல. அவர்கள் அவனைக்கண்டதுமே கட்டிப்பிடித்தபடி தங்கள்
மைந்தர்களின் சாவுகளையும் உடன்பிறந்தாரின் சாவுகளையும் எண்ணித்தான் அழுகிறார்கள். நெருக்கமான
ஒருவரைப் பார்த்ததும் அதைத்தான் செய்யமுடியும். அவர்கள் திருதராஷ்டிரரைப்பார்த்தாலும்
அப்படித்தான் கதறி அழுதிருப்பார்கள். அந்த அழுகை கட்டற்று வருவதும் பின்னர் அவர்கள்
அந்த வெளிப்பாட்டுக்காக நாணம்கொண்டு விலகி வேறுவகையில் பேசிக்கொள்வதும் மிக நுட்பமாக
அமைந்துள்ளன. இந்நாவலின் உச்சமான இடங்கள் அவை
ஜெயராமன்