ஜெ
மகாபாரதப்போரில் இருந்துகொண்டு
இந்த வரியை வாசிக்கையில் எவ்வளவோ அர்த்தங்கள் உருவாகின்றன
வஞ்சம்
கொள்பவரிடம் தெய்வங்கள் கேட்கின்றன, எத்தனை? எவ்வளவு? எதுவரை? ஒவ்வொன்றும், அனைத்தும், இறுதிவரை என்று உரைக்கில் மட்டுமே வஞ்சத்தில் வெற்றியை
அளிக்கின்றன. வஞ்சநிறைவின் இனிமையை அளிக்கின்றன.
வன்மம் மனதில் இருந்தால் அது
எரித்து அழித்துவிடும் என்பதைத்தான் இப்படிச் சொல்லியிருக்கிறீர்கள். இதை அன்றாட வாழ்க்கையில்
பார்த்துக்கொண்டேதான் இருக்கிறோம். ஆனால் நான் பார்த்தவரை வஞ்சம் நிறைந்த மனம் உள்ளவர்கள்
வேறு ஏதோ வகையில் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு மிகப்பெரிய குறை மனசில் உள்ளது.
அதைத்தான் இப்படி நிரப்பிக்கொண்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன்
என் வாழ்க்கையிலேயே இதைப்பார்த்திருக்கிறேன். தீராத வன்மத்துடன் வாழும் பெண்கள் பலர் உண்டு. அவர்கள் எல்லாருமே துக்கத்தால் அவதிப்பட்டவர்கள். புருஷனால் கைவிடப்படுவது. கொடுமைப்படுத்தப்படுவது. நிர்க்கதியாக நிற்பது. அன்பே கிடைக்காமல வாழ்வது. இப்படித்தான் ஆகியிருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்க்கையில் உள்ள வெறுப்புதான் இப்படி வெளிப்படுகிறது.

டி.சுசீலா