அன்புள்ள ஜெ
குந்தி
ruthless என்று சொல்லப்படவேண்டிய கதாபாத்திரம். அவள் தன் ஐந்து மைந்தர்களுக்காக கர்ணனிடம்
சத்தியம் வாங்கிக்கொள்கிறாள். ஆனால் அவளுக்கு அவனை அர்ஜுனன் கொல்லமாட்டான் என்ற ஒரு
சொல்லை கூற மனமில்லை. அவள் விடைபெற்றுச்செல்லும்போது நன்றாகவே தெரிந்திருக்கிறாள்.
அர்ஜுனனால் கர்ணன் கொல்லப்படுவான் என்று. அவளே பலமுறை அதைச் சொல்கிறாள். கர்ணன் களத்தில்
சாவான் என்று. அதைப்பற்றி அவள் இம்மிகூட கவலைப்படவில்லை. அந்த இரக்கமில்லாத பிடிவாதத்தைப்
பார்க்கையில் இவள்தான் மகாபாரதப்போருக்கே அடிப்படையானவள் என்ற எண்ணம் வருகிறது. திரௌபதி
எல்லாம் இவள்முன் ஒன்றுமே இல்லை
எஸ்.அரசன்