Monday, January 14, 2019

புரிந்தது,புரியாதது



ஜெ வணக்கம்

கார்கடல் அத்தியாயம் - 17,18

புரிந்தது
கர்ணன் பீஷமரிடமும், துரோணரிடமும் ஆசி வாங்கும் காட்சிகள் அருமையாக வந்துள்ளன.

பீஷ்மர் பேச ஆரம்பித்தவுடன் துரியோதனன் படுகளத்தை விட்டு செல்ல விழைகிறான் எங்கே பீஷ்மர் தடுத்து விடுவாரோ என்று அஞ்சுகிறான். துரோணரிடம் செல்லலாம் என்றாலும் தயக்கம்் காட்டுகிறான்.

கர்ணனுக்கு இவர்கள் இருவரிடம் ஆசி பெறுவதற்கான விழைவு இயல்பானது. ஆனால் துச்சாதனின் குணசித்திரம்தான் சற்றே அதிசயக்க வைத்தது. அண்ணனை எதிர்த்து ஒரு சொல் பேசாதவன், இரு நிகழ்ச்சிகளிலும், அண்ணனின் முதற் கட்டளையை தாண்டி முடிவேடுக்கிறான்.

அவனை உந்தியது எது என்றது அறிய முடியா ஒரு பரவசமாக இருந்தது. வெற்றிக்கு ஒரே வழியான கர்ணனை எப்படியாவது ஊக்கமடைய செய்வது. அப்படியானால் அண்ணனுக்காகவே அண்ணனை மீறுகிறான். அல்லது தனது குடியின் முன்னோரின் சொல் மீதான மதிப்பா?

எப்படியோ பீஷ்மர், துரோணர் சொல் இல்லாமல், கர்ணன் சோர்வடைந்திருக்கலாம். அவனுக்குரிய ஊக்கமும் ஆசியும் அமைய இவன் துணையாகிறான். கர்ணனுக்கு இந்த ஆசிகள் கிடைத்ததும் இங்கிருந்து போர் முற்றலித்தல் நோக்கிதான் செல்லும்

அதனால்தான் ஜேஸ்டா தேவி, மூதேவி, தவ்வை, பாற்கடல் நஞ்சை துச்சாதனுக்கு புகட்டி செல்லுகிறாள்.

புரியாதது
துரோணர் கர்ணனிடம் பழைய நினைவுகளை பகிர்ந்துகொள்பவை நடந்தவை.

ஆனால் பீஷ்மர் கர்ணனை அவன் சிறுவனாக இருக்கும் பொழுது திருட்டு தனமாக பார்க்க செல்ல வேண்டும். இது குந்தி மருமகளா வருவதற்கு முன்பு அல்லது பின்பு என்று தெரியவில்லை.

முன்பு என்றால் கர்ணனுக்கும் ஹஸ்தினாபுரியின் குடியுரிமைக்கும் தொடர்பில்லை. 

 பின்பு என்றால் காந்தாரிக்கும், குந்திக்கும் பிள்ளைகள் பிள்ளைகள் உண்டு, அரசு முடி அமைய இளவரசர்கள் நிறைய உண்டு. அப்படியே இருவருக்கும் பிள்ளைகள் பிறக்கவில்லை என்றாலும், முடி என்பது தந்தை வழி அமைவது. கர்ணன் அரசணாக முடியாது.

பீஷ்மருக்கு குழந்தைகள் மேல் அதீத பிரியம் ஏற்படும் என்றால் அக்குழந்தை ஹஸ்தினபுரியின் அரசாட்சியை தொடர ஏதுவாக உள்ளவன் என்ற நோக்கில் மட்டும் தான் இருக்கும். அவரது ஆளுமை அப்படி. வாழநாள் முழுதும் அதற்குதான் செலவிட்டிருக்கிறார்.

பீஷ்மரின் அந்த நினைவும் அவரை உந்தியது எது என்பதும் புரியவில்லை. புரிந்தாலும் தர்க்கம் இடிக்கிறது.

அன்புடன்



சதீஷ் கணேசன்