அன்புள்ள ஜெ
நலம்தானே? வெண்முரசு ஒவ்வொருநாளும்
காத்திருந்து வாசிக்க வைக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் உறுதியான
குணச்சித்திரத்துடன் இருப்பதும் அவை மெல்லமெல்ல உருமாறுவதும்தான் வெண்முரசின்
அழகு. அப்படிப்பார்த்தால் துச்சாதனனின் கதாபாத்திரம்தான் மிக மிக தட்டையானது.
அண்ணன் மேல் பற்றுகொண்ட ஓர் அடிமை. ஆனால் அவன் கதாபாத்திரம் மெதுவாக மாறிக்கொண்டே
இருக்கிறதைக் காணமுடிகிறது. இன்று அவன் தவ்வை [மூதேவி] அளித்த அமுதை அருந்தும்போது
ஒரு திருப்புமுனையையே அடைந்துவிட்டான். படிமங்கள் வழியாக வெளிவரும் இந்த ஆழவெளிப்பாடுதான்
வெண்முரசின் ஆழம் என நினைக்கிறேன்
ராஜசேகர்