அன்புள்ள ஜெ
மழைப்பாடல் வாசித்துக்கொண்டிருந்தேன். காந்தாரி துரியோதனனுக்கு அமுதூட்டுகிறாள். மழைபோல பால் கொட்டிக்கொண்டிருக்கிறது. அந்தக்காட்சியே ஒரு பெரிய கவிதை. அவ்வளவு பால் கொட்டியும்கூட நெஞ்சிலுள்ள பால் தீரவேயில்லை என்று காந்தாரி சொல்கிறாள்
ஒருவரியில் அப்படியே நின்றுவிட்டேன். அந்த வரி ஒரு அற்புதமான கவிதை. குருதியின் வாசனைதான் இதுவும். அது காய்மணம், இது கனிமணம்…இப்படிப்பட்டவரிகளால்தான் வெண்முரசு காவியமாகிறது. நான் மழைப்பாடல் வரைக்கும்தான் வாசித்திருக்கிறேன். இதற்குள் இரண்டாயிரம் அழகான வரிகளுக்குமேல் நோட் செய்து வைத்திருக்கிறேன்
எஸ்.கனகசுந்தரம்