அன்புள்ள ஜெ
வெண்முரசில் பாரதவர்ஷத்தின்
சித்திரம் இருப்பதை ஒருவர் எழுதியிருந்தார். அர்ஜுனனின் பயணங்கள், பீஷ்மரின் பயணங்கள்
வழியாக மிகமிக விரிவான பயணத்தின் சித்திரம் வெண்முரசிலே உள்ளது. தெற்கே மதுரையிலிருந்து
இளநாகன் இந்தியா முழுக்க பயணம்செய்கிறான். காண்டீபம் நாவலில் அர்ஜுனன் மேற்கே சாவுகடல்
வரைக்கும் செல்கிறான். பீஷ்மர் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் வரைக்கும் செல்கிறார்.
அர்ஜுனன் வங்காளம்
வழியாக அஸாம் நாகநாடு மணிப்பூர் வரைச் செல்கிறான். அதன்பின் கடல்வழியாக தாய்லாந்துக்குள்
நுழைந்து இமையமலைக்குச் செல்கிறான். பூரிசிரவஸ் லடாக் வரைச் செல்கிறான். இந்தியாவின்
முழு நிலப்பகுதியிலும் வெண்முரசு நடைபெறுகிறது. இதிலுள்ள ஊர்களை அடையாளம் படுத்திப்படிப்பதென்பது
ஒரு அற்புதமான அனுபவம்
பாஸ்கர் எம்.