அன்புள்ள ஜெ
மழைப்பாடலை இப்போதுதான்
வாசித்தேன். முன்பெல்லாம் எனக்கு இவ்வளவு பக்கமிருக்கிறதே இதை எப்படி வாசிப்பது என்ற
தயக்கம் இருந்தது. இன்றைக்கு இத்தனை பக்கங்கள் இன்னும் இருக்கின்றன, நெடுநாட்கள் வாசிக்கலாம்
என்ற நிறைவான எண்ணம் இருக்கிறது. அது மனதை இனிப்பாக்குகிறது.
மழைப்பாடலில் குந்தி
காந்தாரி இருவரும் நகர்நுழைகிறார்கள். குந்தி உள்ளே நுழையும்போது மழை. காந்தாரி உள்ளே
நுழையும்போது தீ. இரண்டு அடிப்படை எலெமெண்டுகளைக் கொண்டு உருவகப்படுத்தப்பட்டிருக்கும்
விஷயம் பெரிய ஒரு பரவசத்தை உருவாக்குகிறது
எஸ்.பவானி