அன்புள்ள ஜெ
அவைமரியாதைகள்
பற்றிய ஒரு கடிதத்தை வாசித்தபோது இதை எழுதவேண்டுமென்று தோன்றியது. வெண்முரசு முழுக்க
வந்துகொண்டே இருப்பது இந்த அவைமரியாதை விவகாரம். மழைப்பாடலில் தொடங்குகிறது. பாஞ்சாலி
சுயம்வரம், இந்திரப்பிரஸ்த கால்கோள்விழா என்று இது நடந்துகொண்டே இருக்கிறது.
கடைசியில் மகாபாரதப்போரின்போதுகூட
இந்த மேல்கீழ் விவகாரம் பேசப்படுகிறது. இது மகாபாரதத்தின் அடிப்படைகளில் ஒன்று என்று
சொல்லலாம். போர் நடந்ததே இதற்காகத்தான் என்று வெண்முரசு சொல்கிறது. ஆரம்பத்தில் சபைகளில்
நடந்தது கடைசியாக களத்தில் நடைபெறுகிறது. ஒரு பாபெரும் reshuffle நடந்து முடிகிறது.
மகாபாரதப்போரில் நடைபெற்றது அந்த reshuffle என்றுதான் வெண்முரசு சொல்கிறது. ஆகவேதான்
ஆரம்பம் முதலே அந்த பூசலைச் சொல்லிக்கொண்டே இருக்கிறது
ஆர்.கண்ணன்