அன்புள்ள ஜெ,
எனது வாசிப்பு அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துள்ளேன் , இதில் கேட்பதற்கு , விவாதிப்பதற்கு நிறையா இருக்கிறது . முதலில் எனது வணக்கங்கள் , பிழைகள் இருந்தால் மன்னிக்கவும் , உங்கள் உற்சாகம் சிலிர்க்கவைக்கிறது , விஷ்ணுபுரம் , காடு , ஏழாம் உலகம் படித்துள்ளேன் , இது வேற லெவலா இருக்கு . இதை படிக்கும் பொருட்டு நான் அடையும் ஒவ்வொரு நிறைவையும் உங்களுக்கு சமர்பிக்கிறேன் .
நன்றி
லக்ஷ்மி நரசிம்ஹன் லட்சின்
வெண்முரசு ---- முதற் கனல் முடிவடைந்தது , ஐநூற்றி மூன்று பக்கங்கள் ஐந்து நாட்களில் முடிவுற்றது, ஒவ்வொரு வரியாக படித்து , பிரமித்தது முடிச்சுட்டேன் . அடுத்தது "வண்ணக்கடல்" .
மானசாதேவியில் தொடங்கி , ஆஸ்திகன் , ஜனமேஜெயன் , பிரதீபர் , சந்தனு , விச்சித்ரவீர்யன் , பீஷ்மர் , சத்யவதி , அம்பை , அம்பிகை , அம்பாலிகை , சிவை , சிகண்டி, அகத்தியர் , கிருஷ்ண த்வைபாயனர் என்று மகாபாரத விரிவு நடந்துகொண்டே இருக்கிறது . மகாபாரதமே ஒரு கொண்டாட்டம் தான் , உணர்சிகளின் கொண்டாட்டம் , உறவுகளின் கொண்டாட்டம் , தனிமையின் கொண்டாட்டம் , கூட்டத்தின் கொண்டாட்டம் , பிழைகளின் கொண்டாட்டம் , புதுமைக்கும் பழமைக்கும் நடக்கும் அறப்போரின் கொண்டாட்டம் , காம , க்ரோத , மோக கொண்டாட்டம் .
அதன் ஊடாக , ஹச்தினபுரி, பாஞ்சாலம் , காசி , கங்கபுரி , சிபிநாடு , விதர்பம் என்று பாரதவர்ஷத்தின் நிலபரப்புகளை , கனவோடு நினைவு பின்னி , தக்க்ஷனும் தக்க்ஷியும் பின்னி பிணைந்து ,சிதறி விண்ணில் விண்மீன் பறக்க, பாதாளத்தில் நாகங்கள் நெளிய , நினைவில் கற்பனை ஊர , கதையில் இத்தனை சுவை என்று இதுவரை அறிந்ததில்லை.
ஒரு கதைக்குள் பல கதை அதுவே மகாபாரத கதை என்று வியப்புடன் , திமிருடன் , பணிவுடன் முதல் நாவலை முடித்தவுடன் ஒரு எழுச்சி . படித்தவனுக்கே இந்த எழுச்சி என்றால் , படைத்தவனுக்கு எப்படி இருக்கும் .இதில் ஓடும் ஒரு சரடு என் நெஞ்சுக்கு பிடித்த ஒன்று , அது ஜெயமோகனின் சரடு , ஒரு தத்துவார்த்த சரடு , fundamentals of life என்று ஒன்று இருந்தால் அது எப்படி மாறிக்கொண்டே இருக்கும் , மாற்றம் எப்படி ஒரு பழைய தர்மமும் , புதிய தர்மமும் உரசி ஒரு தர்மத்தை கண்டடைகிறது என்ற சரடு . அதில் நகைச்சுவை ரசத்தையும் ஆங்காங்கே கலந்து விட்ட ஆசிரியருக்கு மனமார்ந்த நன்றிகள் , சுவர்னை , சோபை ,விருஷ்டி என்று ஒரு மனவியல் தளத்தை நினைவூட்டுகிறது . என்னை மிக கவந்த்தவை , அம்பைக்கும் - பீஷ்மர்கும் நடக்கும் விவாதம் . ஆச்திகனுக்கும் - ஜனமேஜயனுக்கும் நடக்கும் விவாதம் , நோயுற்றாலும் விசித்ரவீர்யன் மனதை கவந்து விடுகிறான் அம்பிகையை கவர்ந்தது மாயம் இல்லை . எனக்கு பிடித்த சில வரிகள் , இப்படியெல்லாம் இந்த வரிகளை பிரித்து எடுக்கலாமான்னு தெரில. " நூல்கள் நெறிகளை சொல்கின்றது என்பது பெரும் மாயை , நெறிகளை வளைக்கும் முறைகளையே கற்பிக்கின்றன, நீ எதையுமே கர்காததால்தான் இந்த தெளிவு உன்னுள் இருக்கிறது "
உலகம் மீது வன்மம் கொண்டவர்கள் அவர்களுக்கு நெருக்கமானவர்கலையே வதைபார்கள்
பெண்கள் குளிர்ந்த கருப்பையால் எப்போதைக்கும் விடுவிக்கபட்டிருகீரார்கள் . ஆண்கள் எரியும் சித்தத்தால் கட்டுண்டிருகீரார்கள்
ஆண்களின் தனிமைப்போல பெண்களை கனிவுகொள்ள செய்வது எதுவும் இல்லை , கனிவுபோல பெண்களை காதல்நோக்கி கொண்டுசெல்வதும் எதுவும் இல்லை .
"ஆம் மனிதர்கள் பிறவியின் வலையிலும் , குளத்தின் வலையிலும் , செயலின் வலையிலும் அமர்ந்திருக்கிறார்கள்அந்த வலைகளை அறிய எவராலும் முடியாது . ஆனால் ஒரு வழி உள்ளது , அதை கணஞானம் என்கிறோம் . இங்கே இப்போதே இக்கணத்தில் மட்டும் அந்த வலையை பார்க்கிறோம்
பெண்ணுடன் சேர்ந்து அழாத ஆணுக்கு சேர்ந்து சிரிபதர்க்கு உரிமையில்லை
கசப்பானதாயினும் உண்மை ஒரு நிறைவை அளிக்கிறது
உனக்கு ஒன்று தெரியுமா மனிதர்களுக்கு பிறர் பேசும் அனைத்தும் பொருள் அற்றவையாக தெரிகிறது , பிறர் பேச்சில் அவர்கள் தன்னைமட்டுமே காண்கிறார்கள் , தானிடம்பெறாத பேச்சை கேட்டால் , தன்னை விளக்கிகொள்வார்கள், இல்லையேல் தன்னை செலுத்த முயல்வார்கள் .
பிரியமான முறையில் பாழ்படுத்தி கொல்வதர்க்காகததானே வாழ்கை அழிக்கபட்டிருக்கிறது.
ஞானத்தின் முடிவில்லா வல்லமையை அறியாமல் பேசுகிறாய் , மண்ணுலகில் ஒவ்வொரு உயிருக்கும் ஞானம் கடமையாகபட்டுள்ளது, புல்லும் , புழுவும் , பூச்சியும் , கிருமியும் கூட ஞானத்தையே உண்டு வாழ்கின்றன , ஞானத்தால் முழுமை பெற்ற ரிஷிகள் பிறப்புகள் அறியப்படாதவை . ரிஷ்யசிங்கர் மானின் மைந்தர் , கணவர் மயிலுக்கும் நாகத்துக்கும் பிறந்தவர் , ஞானமே அவர்களை முனிவர்கலாகியது , பிறப்பு ஒரு தொடக்கம் மட்டுமே.
குழந்தைக்குள் கன்னியும், கன்னிக்குள் அன்னையும் குடியேறும் தருணம் தேவர்கள் அறிந்ததில்லை தேவி
மது லச்சின்