Wednesday, February 4, 2015

தாய்மையும் காமமும்



ஜெ,

இன்று வந்த கதை [ http://www.jeyamohan.in/70234 புலோமை] மிகத்தொன்மையான கதையாக இருக்கலாம். அது வேதகாலக்கதை மகாபாரதத்தில் நுழைக்கப்பட்டது என்று அரவிந்தர் முன்னாடி எங்கோ எழுதியிருந்ததாக ஞாபகம். பழைய கதைகளில் பெண்ணுக்கான போராட்டம் பலகதைகளில் இருந்துகொண்டிருக்கும் என்பதைக் காணலாம். இதுவும் அவ்வகையான ஒரு சின்ன துணைக்கதை என்ற அளவிலேயே இருந்தது.  இது அக்கால சூதர்களால் பாடித்திரிந்த கதையாக இருக்கலாம்

நீங்கள் அதை விரிவாக்கியிருக்கும் விதம் வியப்பூட்டுகிறது. கதை இப்போது காமத்துக்கும் தாய்மைக்குமான நுட்பமான உறவைப்பேசக்கூடியதாக அமைந்துள்ளது. அதிலும் தொடக்கத்திலேயே இது வந்துவிடுவதனால் இது உண்மையில் திரௌபதியின் இயல்பை விளக்கும் கதை என்று புரிந்துகொள்ள வழியிருக்கிறது. அதை ஆண் சொல்லாமல் ஒரு சூதப்பெண் சொல்வதும் மேலதிகமான அர்த்ததை அளிக்கிறது

நுணுக்கமான கதை. அவளைவிட அவள் வயிற்றில் வளரும் குழந்தை எடைமிகுந்தது என்பது ஆச்சரியமானது. அதற்கு எவ்வளவோ அர்த்தங்கள் இல்லையா?

சுவாமி