Friday, July 8, 2016

கொற்றவை






ஜெ,

சரணாகதியின் அடையாளமாகவே பாஞ்சாலி வஸ்திராபகரணம் வைணவ மரபிலே பார்க்கப்படுகிறது. சொல்லப்போனால் அதற்காகவே ரொம்பப்பின்னால், அனேகமாக நிம்பார்க்கரின் காலகட்டத்திலே உருவாக்கப்பட்டதுதான் அந்தக்காட்சி. மூலபாடத்தில் இல்லாதது. வடக்கே மகாபாரதங்களிலும் இல்லை. இப்போது டிவி வழியாக வந்து நின்றுவிட்டது

அதை நீங்கள் எப்படி மாற்றலாம் என்று ஒரு நண்பர் கேட்டார். நான் சொன்னேன். ஆரம்பம் முதலே ஐங்குழல்கொற்றவையாகவே நாவலில் திரௌபதி வந்துகொண்டிருக்கிறாள். பெண்ணாகவும் கொற்றவையாகவும். மகாபாரத மூலத்திலேயே அவளை அப்படிப்பார்ப்பதற்கான லீட் இருக்கிறது. அவள் அக்கினிபுத்திரி. ஆகவேதான் அப்படி மாற்றப்பட்டுள்ளது என்றேன்

ஆரம்பத்திலிருந்தே எல்லாவற்றையும் ஓரளவு முன்னாடி அறிந்தவளாகவும் எல்லாவற்றையும் தானே செய்துகொள்பவளாகவும்தான் பாஞ்சாலி வந்துகொண்டிருக்கிறாள்

வரதராஜன்