அன்புள்ள ஜெ,
வெண்முரசு பன்னிரு படைக்களத்தில்
கர்ணன் படிப்படியாகக் கொள்ளும் உருமாற்றம் பயப்படுத்த்கிறது. மனிதர்கள்
அப்படி மாறக்கூடியவர்கள்தான். கர்ணன் அப்படி மாறினான் என்பதுதான் மூலக்கதை.
ஆனால் அவனுடைய மாற்றம் ஒரு பெரிய அதிர்ச்சியைத்தான் அளிக்கிறதுஅதற்கான காரணம் என்ன என்பது திரும்பிப்பார்க்கையில் வெண்முரசில் தெளிவாகவே இருக்கிறது. தோல்வியின் வன்மம் கூடவே நண்பன் மீதுள்ள பற்று. இருந்தாலும் அந்த மாற்றம் விளக்கமுடியாத ஒன்றாகவே இருக்கிறது
அவன் நாகவேதத்தின் காவலனாக ஆவான் என்று நினைக்கிறேன். இப்போது மகாபாரதப்போரே ஒரு கொள்கைப்போராட்டமகா ஆகிவிட்டது
அரவிந்தன்