Thursday, July 7, 2016

லீலை

 
 
அன்புள்ள ஜெமோ
நீங்கள் வெண்முரசில் கிருஷ்ணனை எப்படி காட்டுகிறீர்கள் என்பது குழப்பமாகவே இருக்கிறது. ஆரம்பம் முதல் ஒரு யாதவ அரசனாகவே காட்டுகிறீர்கள். யாதவ அரசனை உருவாக்கியவன். அதற்காகச் சதிகளைச் செய்தவன். ஆனால் பின்னர் நீலம், இந்திரநீலத்தில் கடவுள்தன்மை கொண்டவனாக மாறினான். பிறகு ராஜதந்திரியாக தெரிகிறான்.
கிருஷ்ணன் செய்யும் தெய்வலீலைகளை முழுமையாகத்தவிர்த்துவிட்டீர்கள். அவனை யதார்த்தமாக காட்டுகிறீர்கள். நீங்கள் கிருஷ்ணனை தெய்வமாகக் காணவில்லையா?
அருண் வெங்கடாச்சலம்

அன்புள்ள அருண்

நடராஜ குரு கிருஷ்ணனை  ‘இந்தியாவின் மாபெரும் ரகசியம்’ என்கிறார். உலகின் ஆன்மரகசியங்களில் தலையாயது என்கிறார்

வெண்முரசு அதை அறியமுயல்கிறது. வரலாற்றில், தத்துவத்தில் வைத்து.

அறிவதற்கு நேர் எதிரானது அவனை கடவுள் என்று சொல்லி எல்லாம் அவன் லீலை என்று வாதிடுவது.

அது மகாபாரத்தின் அடிப்படையான பல இடைவெளிகளை அறியவே பெரிய தடையாக ஆகும்

கிருஷ்ணனின் லீலை என்பது சேலைகொடுத்ததோ மலையை தூக்கியதோ அல்ல.அதைவிட மகத்தான ஞானப்பங்களிப்பு. அதைச் சொல்வது வெண்முரசு
ஜெ