Sunday, August 7, 2016

புவிக்காட்சி



இப்புவிக்காட்சி என்பது குறையொளி திகழ்பவற்றின் வலைப்பின்னலே. என்னும் வரி என்னை பலவாறாகச் சிந்திக்கவைத்தது. இந்தச்சிந்தனை ஜைனமரபிலும் உண்டு. பூர்ணம் என்பது மனிதனால் கிரஹிக்கக்கூடியது அல்ல. அபூர்ணம் அல்லது அபரியாப்தம் ஆன விஷயங்களே மனிதனுக்கு தெரிகின்றன. ஜைனமுனிவர் ஒருவர் மனிதனின் காதுக்குக் கேட்கும் ஒலி போல என அதை விளக்கினார். அதாவது பெரிய ஒலியும் கேட்காது சின்ன ஒலியும் கேட்காது. கேக்கக்கூடிய ஒலி ஒரு எல்லைதான்.

ஆனால் இங்கே உள்ள அனைத்துமே குறையுடையவைதான் என்பது மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது. முன்பு ஒரு இடத்தில் குறையுடையவற்றை மனித மனம் நிறைத்துக்கொள்கிறது என வந்தது. அஷ்டவக்ரர் பற்றிய இடம் அது. அதேபோல இந்த உலகை நாம் நிறைத்துக் கொள்கிறோமோ என நினைத்துக்கொண்டேன். அதற்குத்தான் இத்தனை கொந்தளிப்புகளா?

ஆர் ராகவன்