Sunday, August 7, 2016

பிரக்ஞா சூரியன்





சூரியனுக்கும் பிரக்ஞைக்குமான உவமை முக்கியமானது. அனைத்தையும் சூரியன் துலக்குவதுபோல பிரக்ஞை நாம் காணும் உலகத்தை துலக்கி நமக்கு அளிக்கிறது. தூங்கும்போது உலகம் நிழல்களாக ஆகிவிடுகிறது. அதைப்போல பிரக்ஞை மயங்கும்போது அனைத்தும் நிழலுருவங்களாக ஆகிவிடுகின்றன. தர்மர் சொல்லும் அந்த சூரியத்துதியும் அதனுடன் இணைந்து வெளிப்படுகிறது

நான் இலங்கையில் வேலைபார்க்கும்போது அங்குள்ள பிட்சுக்கள் சூரியனை கும்பிடுவதை கண்டிருக்கிறேன். அவர்களிடம் சூரியனை அவர்கள் கும்பிடலாமா என்று கேட்டேன். சூரியனை கடவுளாகக் கும்பிடவில்லை, பிரக்ஞையாகக் கும்பிடுவதாகச் சொன்னார்கள். அவர்களுக்குப் பிரக்ஞை என்பது கடவுள். பிரக்ஞாதாரா என்னும் பெண் தெய்வம் உள்ளது. பிரக்ஞா பாரமிதா என்று ஒரு நூலே உள்ளது. அது சிங்கள மொழியிலும் உள்ளது.

இந்த எண்ணங்கள் எல்லாம் பௌத்ததிற்கு முன்பாகவே வந்துவிட்டன என்று தெரிந்துகொள்வது மனநிறைவை அளிக்கிறது

ஜெயராஜன்