Saturday, August 6, 2016

அன்றாடம்




நெடுந்தொலைவிலேயே திரௌபதியின் வருகையை பீமன் பார்த்துவிட்டான். அத்தனை தொலைவில், அத்தனை சிறிய அசைவுகளிலிருந்தே அவள் சினத்தை புரிந்துகொள்ளமுடிவதை எண்ணி வியந்தான்.

பெரிய பெரிய விஷயங்களை எல்லாம் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். சொல்வளர்காடு அப்படித்தான் செல்கிறது. ஆனால் என் வாசிப்பில் இந்தவகையான சிறிய விஷயங்கள்தான் ஒரு கதைக்கு உயிர் என நினைக்கிறேன். இந்தமாதிரியான அன்றாடவாழ்க்கைநுட்பங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. எப்படி மனிதர்கள் கோபத்தில் நடந்துகொள்வார்கள். எப்படி உடலசைவுகள் வெளிப்படும். எப்படி மனசுகள் ஒன்றை ஒன்று வேவுபார்க்கும். எல்லாமே நுட்பமாக வெளிவரும் இடங்கள் ஏராளம்

மேலே சொன்ன வரியிலேயே நான் ஆழ்ந்துவிட்டேன். அவ்வளவு தூரத்தில் ஒரு நிழல் மாதிரி தெரியும்போதே கோபம் டிப்ரஷன் எல்லாம் எப்படி தெரிகிறது. நம் லாஜிக் மனம் அதை அறிகிறதில்லை. எப்படியோ தெரிந்த்விடுகிறது. நானெ இதை நாலைந்துமுறை நினைத்திருக்கிறேன்
சாரதா