Saturday, August 6, 2016

பிரக்ஞை






ஜெ,

வெண்முரசின் சொல்வளர்காடு கொஞ்சம் வித்தியாசமானது. பல அத்தியாயங்களை மீண்டும் மீண்டும் வாசிக்கச்செய்கிறது. பல சந்தர்ப்பங்களில் வாசிப்பதே மேலோட்டமகா ஓடிப்போக உள்ளே ஏதோ கனவுகள் கண்டுகொண்டிருப்பதாகத் தெரிகிறது.

குடத்துக்குள் வானம் என்னும் உவமைக்கும் பிரக்ஞையே பிரம்மம் என்னும் வரிக்கும் என்ன சம்பந்தம் என்று எனக்கு பகல் முழுக்க யோசனை ஓடியது. பிறகு புரிந்துகொண்டேன். குடத்துக்குள் இருப்பதும் வானம்தான். குடம் உடைந்தால் அது எல்லையற்ற வானமாக ஆகிவிடுகிறது. குடம் எல்லைக்குட்பட்ட வானம். ஆனால் அது ஒரு தோற்றம் மட்டும்தான்

அதேபோல பிரம்மாண்டமான இந்தப்பிரபஞ்சமும் பிரம்மம்ம் எல்லாமே எல்லையற்ற பிரக்ஞை மட்டும்தான். அதிலிருந்து அள்ளி எடுத்து வைத்திருக்கும் கொஞ்சம் பிரக்ஞைதான் நமக்குள் இருப்பது. இது எல்லை உள்ளது. ஆனால் இதுவும் அந்த முடிவிலாத பிரக்ஞைவெளிதான்

இந்த இணைப்பு என் மனதில் உருவானபோது ஒரு பெரும் பரவசத்தைஅ டைந்தேன்

சித்ரா